ஐரோப்பா

பிரான்ஸ் – ஸ்பெயினுக்கு இடையிலான நட்புறவு ஒப்பந்தம் நிராகரிப்பு

  • October 1, 2026
  • 0 Comments

ஸ்பெயின் செனட் சபை பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் இடையிலான இரு தரப்பு நட்புறவு ஒப்பந்தத்தை நிராகரித்துள்ளது. இருப்பினும் இருநாட்டு ஜனாதிபதிகளும் இவ்விரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை ஆதரிப்பதோடு, இடம்பெயர்வு, பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் பிரச்சினைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிக ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். மொன்க்ளோவா Moncloa  அரண்மனையில் நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில், இருநாட்டு ஒத்துழைப்பை செனட்சபை நிராகரித்தமைக்காக பெட்ரோ சான்செஸ் மன்னிப்பு கோரினார். தன்னுடைய பதவிக்காலம் முடிவதற்குள் இவ்வகையான ஒரு ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் […]

ஐரோப்பா

EUவில் சேரும் பிரித்தானியாவின் முடிவுக்கு பிரான்ஸ், ஸ்பெயின் வரவேற்பு

  • September 30, 2026
  • 0 Comments

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது குறித்த ஆர்வத்தை இன்று வெளிப்படுத்தினர். அத்துடன் சீனாவுக்கு எதிராக ஐரோப்பா வர்த்தக பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதையும் ஒப்புக்கொண்டனர். பிரிட்டன் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது குறித்த சாத்தியக்கூறை பிரதமர் ஆண்டி பர்னம் வெளிப்படுத்தினார். இதனை மேக்ரான் “சிறப்பான செய்தி” மற்றும் “நல்ல முடிவு” என்று வர்ணித்தார். அத்துடன் பிரித்தானியாவை நாங்கள் வரவேற்க தயாராக இருக்கிறோம் […]

ஐரோப்பா

ஸ்பெயின் அதிரடி : இத்தாலி பயணிகளுக்கான சோதனைக் காலம் நீட்டிப்பு

  • September 6, 2026
  • 0 Comments

இத்தாலியில் இருந்து ஸ்பெயினுக்கு வருகைத் தரும் யணிகளுக்கான சோதனைகளை செப்டம்பர் 22 ஆம் திகதிவரை நீட்டிக்க மெட்ரிட் நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக செப்டம்பர் 07 வரை மட்டுமே நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சியூடாவை புலம்பெயர்ந்தோர் முற்றுகையிட்டதை தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக ஸ்பெயின் பிரதேசத்திலிருந்து வரும் பயணிகளுக்கான தடையற்ற பயண முறையை இத்தாலி முடிவுக்கு கொண்டுவந்தது. இந்நடவடிக்கையானது இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இதனைத் […]

ஐரோப்பா

ஸ்பெயினை தாக்கும் வெப்ப அலை – காட்டுத்தீ அபாயம்

  • September 4, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் பல பகுதிகளில் வெப்பமான வானிலை குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு வெப்பநிலையானது 43 டிகிரி செல்சியஸ் வரை   உயரக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டின் தெற்று மற்றும் மேற்கு பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தீவிர வெப்ப அலை காரணமாகக் காடுகளில் தீ விபத்து ஏற்படும் அபாயம் தீவிரமடைந்துள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம் வெப்பநிலைக்கு ஏற்றவாறு நீரேற்றத்துடன் இருக்கவும் மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

ஐரோப்பா

ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு அருகே படகில் இருந்து ஐவரின் சடலங்கள் மீட்பு

  • September 3, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் கெனரி தீவுகளுக்கு அருகே படகொன்றில் 05 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதேநேரம் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளதாக புலம்பெயர்ந்தோர் உரிமைக் குழு ஒன்று தெரிவித்துள்ளது. உயிர் பிழைத்தவர்களில் மூவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், அவர்கள் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 27 நாட்களுக்கு முன்பு காம்பியாவில் இருந்து புறப்பட்ட படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படகில் ஏராளமானவர்கள் பயணித்த நிலையில் 83 பேர் உயிரிழந்துள்ளதாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த […]

ஐரோப்பா

ஸ்பெயினின் அண்டலூசியா பகுதியில் காட்டுத்தீ – களத்தில் இறங்கிய 275 வீரர்கள்

  • August 8, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் தெற்கு அண்டலூசியா பகுதியில் இன்று மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 275 இற்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது எந்தவொரு குடியிருப்புப் பகுதிக்கும் அச்சுறுத்தல் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செவில் மற்றும் போர்த்துகீசிய எல்லைக்கு இடையில் தீ பரவியதாகவும், இதனால் சுமார் 4,000 ஹெக்டேர் பரப்பளவு சேதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரகாலப் பணிகளுக்கான இராணுவப் பிரிவைச் சேர்ந்த அறுபது வீரர்கள், 275 தீயணைப்பு வீரர்கள், 20 விமானங்கள் மற்றும் கனரக […]

ஐரோப்பா

இத்தாலிய பிரஜைகளுக்கான எல்லை சோதனையை கடுமையாக்கிய ஸ்பெயின்

  • August 8, 2026
  • 0 Comments

இத்தாலியில் இருந்து வரும் பயணிகளுக்கு தற்காலிக எல்லைச் சோதனைகளை அறிமுகப்படுத்தப் போவதாக ஸ்பெயின்  நேற்று அறிவித்தது. இந்தச் சோதனைகள், ஆகஸ்ட் 8 நள்ளிரவில் தொடங்கி செப்டம்பர் 7 வரை நீடிக்கும் என்று ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தாலி தனது எல்லைச் சோதனைகளை உடனடியாக நீக்கவில்லை என்றால், பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஸ்பெயின் அச்சுறுத்தியது, இதற்கு பதலடி கொடுத்த இத்தாலி எக்காரணம் கொண்டும் ஸ்பெயின் நாட்டவர்களுக்கான எல்லை சோதனை நீக்கப்படாது எனக் குறிப்பிட்டது. இதனைத் தொடர்ந்தே […]

ஐரோப்பா

எல்லை கட்டுப்பாடுகள் தொடர்பில் இத்தாலிக்கு இறுதி எச்சரிக்கை – ஸ்பெயின் அறிவிப்பு

  • August 7, 2026
  • 0 Comments

ஸ்பெயினிலிருந்து வரும் பயணிகள் மீது விதிக்கப்பட்டுள்ள எல்லைக் கட்டுப்பாடுகளை வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன் நீக்க வேண்டும் என்று  இத்தாலிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் அரசாங்கம் இன்று இந்த எச்சரிக்கையை விடுத்தது. இந்த நடவடிக்கை “அநியாயமானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் நலன்களுக்கு எதிரானது மற்றும் ஸ்பானிய மக்களுக்கு எதிரான பாகுபாடு கொண்டது” என்று ஸ்பெயின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால், ஸ்பானிய குடிமக்களின் நலன்களைப் பாதுகாக்க “சமமான நடவடிக்கைகள்” எடுக்கப்படும் என்று பிரதமர் பெட்ரோ சான்செஸின் (Pedro Sánchez) […]

ஐரோப்பா

ஸ்பெயினுடனான எல்லையை மூடிய இத்தாலி – ஷெங்கன் தடையற்ற நடமாட்ட முறை நிறுத்தம்

  • August 1, 2026
  • 0 Comments

சட்டவிரோத குடியேறிகள் ஸ்பெயினை முற்றுகையிட்டுள்ள நிலையில்,  அந்நாட்டுடனான தனது கடல் மற்றும் வான்வழி எல்லைகளை மூடுமாறு இத்தாலியின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இத்தாலியின் குடியேற்றப் பகுப்பாய்வு மற்றும் எல்லைப் பாதுகாப்புக் குழுவின் மதிப்பீடுகளின் அடிப்படையில், உள்துறை அமைச்சர் மத்தேயோ பியாண்டெடோசி  (Matteo Piantedosi) தலைமையில் நேற்று  காலை நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இரு நாடுகளுக்கும் இடையேயான ஷெங்கன் தடையற்ற நடமாட்ட முறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான சியூட்டாவிற்கு […]

ஐரோப்பா

காலநிலை மாற்றம் குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்க குழு நியமனம் – ஸ்பெயின் ஒப்புதல்

  • July 29, 2026
  • 0 Comments

காலநிலை மாற்றத்தின் காரணமாக ஸ்பெயினின் பெரும்பாலான பகுதிகளில் காடுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் விளக்கமளிக்கும் அல்லது வழிக்காட்டுதல் நெறிமுறைகளை  வழங்கும் குழுவை நியமிக்க அந்நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தீர்மானம் நேற்றைய தினம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிற்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் கோடைக்காலப்பகுதியில் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,  இந்தக் குழு இலையுதிர் காலத்தில் தனது பணியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “அரசாங்கத் துறைகளால் எழுப்பப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப, இந்தப் பணிக்குழு சுதந்திரமான, கடுமையான மற்றும் பல்துறை […]