“அணுசக்தி தளங்கள் மீது கை வைத்தால்” : ட்ரம்ப்புக்கு தெஹ்ரான் நேரடி எச்சரிக்கை
ஈரானிய அணுசக்தி தளங்களுக்கு எதிரான தனது அச்சுறுத்தல்களை டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்தால், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்க இலக்குகள் மீதும் ‘சக்திவாய்ந்த தாக்குதலை’ தொடுப்போம் என்று தெஹ்ரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கணிசமாக சேதமடைந்த நடன்ஸ் யுரேனியம் செறிவூட்டும் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள, ‘பிக்காக்ஸ் மலை’ (Pickaxe Mountain’) அணுசக்தி தளம் மீது அமெரிக்கா மிக விரைவில்’ தாக்குதல்களை தொடங்கும் என ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
IRGCயுடன் இணைந்த ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையொன்றில், அந்தத் தளம் தாக்கப்பட்டால், அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள் மற்றும் ஆதரவாளர்கள் ஈரானின் ஆயுதப் படைகளின் சக்திவாய்ந்த தாக்குதலுக்கு இலக்காக நேரிடும் என்று ஈரானின் இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.
ஈரானில் குஹ்-இ கொலாங் காஸ் லா (Kuh-e Kolang Gaz La,) என்று அழைக்கப்படும் ‘பிக்காக்ஸ் மலை’ தளத்தில், ஆழமாகப் புதைக்கப்பட்ட இரண்டு சுரங்கப்பாதை வளாகங்கள் உள்ளன.
இவை அமெரிக்க ஆயுதக் கிடங்கில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த பதுங்குக்குழி தகர்ப்பு குண்டுகளின் வரம்பிற்கு அப்பாற்பட்டவை என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் கடந்த 05 மாதங்களாக இடம்பெற்று வரும் மோதலால் ர் 37.5 பில்லியன் டாலர் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் 18 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதோடு, 400 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





