உலகம்

ட்ரம்பின் கருத்துக்களை உடனடியாக அறிய 01 கோடி ரூபாய் கட்டணம் அறவிட திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் தனது உண்மை தளத்தில் (Truth) பதிவிடும் செய்திகளை உடனடியாக பெற 01 கோடி ரூபாயை வசூலிக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மைக்காலமாக உலகளாவிய பதற்றங்களுக்கு மத்தியில் ட்ரம்ப் வெளியிடும் கருத்துக்கள் பங்குச் சந்தையில் முக்கிய இடத்தை வகிக்கின்றன.

உதாரணமாக, மற்ற நாடுகள் மீது விதித்த வரிகளை நிறுத்தி வைக்க அமெரிக்கா முடிவு செய்தது. அப்போது வர்த்தகத்தில் பங்குகளை வாங்குவதற்கு சிறந்த நேரம் எனக் குறிப்பிட்டிருந்தார். இதனால் அந்த நேரத்தில் பங்குகளை வாங்கியவர்கள் மிகப்பெரிய அளவில் பயனடைந்தனர்.

பின்னர், ஈரான் உடன் போரின்போது, ட்ரம்ப் வெளியிடும் கருத்துக்கள் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதனால் ட்ரம்பின் ஒவ்வொரு பதிவும் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு மிகமிக முக்கியமானதாக அமைகிறது.

இதன்காரணமாக ட்ரம்பின் செய்திகளை விரைவாக பெற மாதம் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வரை வசூலிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்