உலகம்

கத்தார் பரிசளித்த சொகுசு விமானத்தால் ட்ரம்புக்கு ஆபத்து?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு கத்தார் பரிசளித்த விமானத்தினால் ஆபத்து ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த விமானத்தில் மேம்பட்ட ஏவுகணை எதிர்ப்புத் திறன்கள் இல்லாமல் இருக்கலாம் என்றும், அதனை திருத்தி அமைக்க சுமார் 01 பில்லியன் டொலர் செலவாகும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் குறித்த விமானத்தை அமெரிக்காவிற்கு வெளியே இயக்குவது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன்  குறித்த விமானத்தை அனைத்து வித பாதுகாப்புடனும் சீரமைக்க  ஓராண்டு கால மறுசீரமைப்புப் பணி போதுமானதாக இல்லை என்று முன்னாள் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ட்ரம்ப் கத்தார் பரிசளித்த அதி சொகுசு விமானத்தை  வடக்கு டகோட்டா மற்றும் துருக்கி பயணங்களுக்குப் பயன்படுத்தினார்.

இருப்பினும் மத்தியக் கிழக்கில் மூண்டுள்ள போர் சூழலால் ட்ரம்பின் விமானம் தாக்கப்படலாம் என அச்சம் வெளியடப்பட்டது.

இதனையடுத்து துருக்கியில் இருந்து பழைய ஏர் ஃபோர்ஸ் வன் விமானத்தில் ட்ரம்ப் அமெரிக்கா திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்