இலங்கை செய்தி

இலங்கை காவல்துறைக்கு சீனா உதவி: ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கை காவல்துறை அதிகாரிகளின் திறனை மேம்படுத்துவதற்கும், காவல்துறை உட்கட்டமைப்பை நவீனப்படுத்துவதற்கும் சீனா உதவி வழங்கவுள்ளது.
சீனத் தூதுவர்

இலங்கை காவல்துறை அதிகாரிகளின் திறனை மேம்படுத்துவதற்கும், காவல்துறை உட்கட்டமைப்பை நவீனப்படுத்துவதற்கும் சீனா உதவி வழங்கவுள்ளது.

இதற்கான உடன்பாடு, நேற்றுக் காலை இலங்கை காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில், சீனத் தூதுவர் வெய் ஹுவா சியாங் (Wei Huaxiang) மற்றும், சீனாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவிற்கும் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் புதிய வகை குற்றச் செயல்களைப் புரிந்து கொள்வதற்கும், அத்தகைய குற்றங்களுக்கு எதிராகச் சட்டத்தை இன்னும் வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துவதற்கும், இலங்கை காவல்து அதிகாரிகளின் திறனை இந்த உதவி வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உடன்பாடு கைச்சாத்திடும் நிகழ்வில்,இலங்கை காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரிய உள்ளிட்ட மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் சீனத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை