உலகம்

மொரோக்கோ நெடுஞ்சாலைக்கு ட்ரம்பின் பெயர் -மன்னருக்கு நன்றி

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் முக்கிய நெடுஞ்சாலையொன்றுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் மன்னர் ஆறாம் முகமதுவுக்கு ட்ரம்ப் நன்றி கூறியுள்ளார்.

இது தொடர்பில் தனது ட்ரூத் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், மிகவும் மதிக்கப்படும் மொராக்கோ மன்னர் ஆறாம் முகமது அவர்களுக்கு நன்றி — இது ஒரு மாபெரும் கௌரவம்! என்றாவது ஒரு நாள், இந்த மாபெரும் நெடுஞ்சாலையின் முழு நீளத்திற்கும் பயணம் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன், விரைவில் அது நடக்கும் என நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

‘அதிபர் டொனால்ட் ஜே டிரம்ப் நெடுஞ்சாலை’ என அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்த வழித்தடம், தெற்கு மொராக்கோவில் உள்ள டிஸ்னிட் (Tiznit) நகரிலிருந்து, மேற்கு சஹாரா பிரதேசத்தில் உள்ள டக்லா (Dakhla) வரை சுமார் 655 மைல்கள் நீண்டுள்ளது.

அத்துடன் மன்னர் ஆறாம் முகமதுவின் “தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமை” மற்றும் “அதிபர் டொனால்ட் ஜே ட்ரம்பின் வரலாற்றுத் துணிச்சல்” ஆகியவற்றின் விளைவாக இந்தத் திட்டம் உருவானது என்று விவரிக்கும் ஒரு விளம்பரக் காணொளியை மொராக்கோ வெளியிட்டுள்ளது.

இந்த நெடுஞ்சாலை பாலைவன நிலப்பரப்புகள், கடலோரப் பகுதிகள் மற்றும் நகரங்கள் வழியாகச் செல்கிறது. மேலும், இது டக்லாவிற்கான போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்