ஆஸ்திரேலியா உலகம் செய்தி

34 ஆண்டுகளுக்குப் பின்னர் வரலாற்றுத் தவறுக்கு மன்னிப்புக் கோரிய ஆஸ்திரேலியா

பல தசாப்தங்களாக இராணுவத்தில் பாலியல் அடையாளத்தின் அடிப்படையில் பாகுபாடுகளுக்கு உள்ளான LGBTQ+ சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் தற்போதைய இராணுவ வீரர்களிடம் ஆஸ்திரேலிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக மன்னிப்புக் கோரியுள்ளது.

பல தசாப்தங்களாக இராணுவத்தில் பாலியல் அடையாளத்தின் அடிப்படையில் பாகுபாடுகளுக்கு உள்ளான LGBTQ+ சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் தற்போதைய இராணுவ வீரர்களிடம் ஆஸ்திரேலிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக மன்னிப்புக் கோரியுள்ளது.

ஆஸ்திரேலிய பிரதி பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்ல்ஸ், புதன்கிழமை (25) நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் சார்பில் இந்த மன்னிப்பை வெளியிட்டுள்ளார்.

1992ஆம் ஆண்டு வரை ஓரினச்சேர்க்கையாளர்கள் ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையில் பணியாற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தக் கொள்கையின் காரணமாகப் பலர் விசாரணைகளுக்கும் கண்காணிப்புகளுக்கும் உள்ளாக்கப்பட்டதுடன், இராணுவப் பணிகளிலிருந்தும் வெளியேற்றப்பட்டனர்.

மேலும், திருநங்கைகள் இராணுவத்தில் பணியாற்றுவதற்கான தடைகள் 2010ஆம் ஆண்டு வரை நீடித்திருந்தன.

இந்நிலையில், கடந்தகாலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்பதாகத் தெரிவித்த ரிச்சர்ட் மார்ல்ஸ், பாதிக்கப்பட்ட வீரர்களின் வாழ்க்கை மற்றும் தொழில் வாய்ப்புகள் பாதிக்கப்பட்டமைக்காக வருத்தம் தெரிவித்தார்.

அத்துடன், வரலாற்று ரீதியாக ஓரினச்சேர்க்கை தொடர்பான இராணுவக் குற்றச்சாட்டுகளில் தண்டிக்கப்பட்டவர்களின் பதிவுகளை நீக்குவதற்கான சட்டமும் கடந்த செப்டெம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி