பிரித்தானியாவில் ஈரானின் உளவு நடவடிக்கை அம்பலம்
பாரசீக மொழி ஒளிபரப்புச் சேவையான லண்டனைத் தளமாகக் கொண்ட ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரைக் கண்காணித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு ஈரானியர்கள், ஈரானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் பிரித்தானிய நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 41 வயதான மொஸ்தபா செபாஹ்வந்த் மற்றும் 46 வயதான பர்ஹாத் ஜவாதி மனேஷ் ஆகிய இருவரும், தெற்கு லண்டனில் உள்ள வூல்விச் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆறு வாரங்களாக நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, வியாழக்கிழமை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். பிரித்தானியாவில் உள்ள சிலரை இலக்கு […]













