ஆசியான் மாநாட்டில் பங்கேற்க பிலிப்பைன்ஸ் பறக்கிறார் பிரதமர் மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை பிலிப்பைன்ஸுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெறவுள்ள தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் (ASEAN) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவே இந்த விஜயத்தை அவர் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருணை, வியட்நாம், லாவோஸ், மியன்மார், கம்போடியா மற்றும் திமோர்-லெஸ்டே ஆகிய 11 நாடுகளை உள்ளடக்கிய ஆசியான் கூட்டமைப்பின் மூலோபாயப் பங்காளியாக இந்தியா விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.




