அநுராதபுரத்தில் மோதல்: கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூவர் பொலிஸ் காவலில்
அநுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்திற்கு அருகில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த பிக்குகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்கக் கோரியும் குறித்த மூன்று பௌத்த பிக்குகளும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில், ராஜாங்கனை சத்தாரதன தேரர் தலைமையிலான குழுவினர் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்ததைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு, அது மோதலாக மாறியுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகள் பயன்படுத்திய தற்காலிக கூடாரத்தை அகற்ற முயற்சித்துள்ளனர். இதனால் அங்கு மேலும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இறுதியில், பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த பிக்குகளையும் பொலிஸார் கைது செய்து காவலில் எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.




