இந்தியா செய்தி

வன்கொடுமை வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டல்; பெண்ணை கொல்ல முயற்சி-இந்தியாவில் கொடூரம்

இந்தியாவின் பீகார் மாநிலத்தில், ஐந்து மாதங்களுக்கு முன்னர் ஐந்து பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 30 வயதுடைய பெண் ஒருவர், மீண்டும் தாக்கப்பட்டு கட்டடத்தின் மாடியிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் பீகார் மாநிலத்தில், ஐந்து மாதங்களுக்கு முன்னர் ஐந்து பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 30 வயதுடைய பெண் ஒருவர், மீண்டும் தாக்கப்பட்டு கட்டடத்தின் மாடியிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த திங்கட்கிழமை இரவு சுமார் 12 முதல் 15 அடி உயரத்திலிருந்து கீழே தள்ளப்பட்டதில், குறித்த பெண்ணின் தலையில் பலத்த காயங்கள் உள்ளிட்ட ஆபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் முதலில் உள்ளூர் சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் நகரிலுள்ள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றொரு சந்தேகநபரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த ஜூன் மாதம் தாக்கல் செய்யப்பட்ட கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கை மீளப்பெறுமாறு வற்புறுத்தும் நோக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் ஏற்கனவே பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தபோதும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின்படி, இரவு சுமார் 11.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றபோது, ஐந்து பேர் அவரைத் தாக்கியுள்ளனர். இதன்போது, அவரது கணவரை அறையொன்றில் அடைத்து வைத்துவிட்டு, பெண்ணைத் தனிமையான இடத்துக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதுடன், உடல் ரீதியாகவும் தாக்கியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவர் வீட்டுக்கு அருகில் கைவிடப்பட்டுள்ளார். மருத்துவப் பரிசோதனையின்போது, அவரது அந்தரங்க உறுப்பிலிருந்து தோட்டா போன்ற பொருள், கல் மற்றும் மரத்துண்டு ஆகியவை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர்களில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றையவர் தலைமறைவாகியுள்ளார்.

மேலும், கூட்டு பாலியல் வன்கொடுமைச் சம்பவம் இடம்பெற்று மூன்று மாதங்களின் பின்னர், சிலர் தங்களது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து மீண்டும் பெண்ணைத் தாக்க முயன்றதாகவும் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இருவர் வீட்டுக்குள் நுழைந்து பெண்ணை மாடிக்கு அழைத்துச் சென்று கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இரு சந்தேகநபர்களுக்கு எதிராகப் புதிய பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பீகார் மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், பெண்களின் பாதுகாப்பு மற்றும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், தங்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பான முறைப்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதமை குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி