ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் ஈரானின் உளவு நடவடிக்கை அம்பலம்

பாரசீக மொழி ஒளிபரப்புச் சேவையான லண்டனைத் தளமாகக் கொண்ட ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரைக் கண்காணித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு ஈரானியர்கள், ஈரானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் பிரித்தானிய நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பாரசீக மொழி ஒளிபரப்புச் சேவையான லண்டனைத் தளமாகக் கொண்ட ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரைக் கண்காணித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு ஈரானியர்கள், ஈரானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் பிரித்தானிய நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

41 வயதான மொஸ்தபா செபாஹ்வந்த் மற்றும் 46 வயதான பர்ஹாத் ஜவாதி மனேஷ் ஆகிய இருவரும், தெற்கு லண்டனில் உள்ள வூல்விச் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆறு வாரங்களாக நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, வியாழக்கிழமை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

பிரித்தானியாவில் உள்ள சிலரை இலக்கு வைத்து வன்முறையை ஏற்படுத்தும் நோக்கில், ஈரானின் உளவுத்துறைக்கு உதவக்கூடிய வகையில் செயற்பட்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இலக்கு வைக்கப்பட்டவர்களில், ஈரானில் தடை செய்யப்பட்டுள்ள ‘ஈரான் இன்டர்நேஷனல்’ (Iran International) ஊடகத்தின் ஊடகவியலாளர்களான மொஜ்தபா பூர்மொஹ்சென், கம்பிஸ் ஹொசைனி மற்றும் ‘இஸ்ரேலுக்கான பிரித்தானிய சட்டத்தரணிகள்’ அமைப்பின் நிறுவன உறுப்பினரான ஜொனாதன் டேர்னர் ஆகியோரும் அடங்குகின்றனர்.

இதே வழக்கில் மூன்றாவது பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்ட 57 வயதான ஷபூர் கலேஹாலி கானி நூரி அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அமைப்பு, அரச அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான புதிய சட்ட அதிகாரங்களின் கீழ், கடந்த ஜூலை மாதம் பிரித்தானியாவில் தடை செய்யப்பட்டது. இந்த அமைப்புக்கு ஆதரவளித்தல் அல்லது உதவுதல் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்படுபவர்களுக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

இருவருக்குமான தண்டனை விபரங்கள் எதிர்வரும் டிசம்பர் 17ஆம் திகதி லண்டனின் மத்திய குற்றவியல் நீதிமன்றத்தில் (Old Bailey) அறிவிக்கப்படவுள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி