விஜித ஹேரத் தலைமையிலான குழு ஜெனிவா தொடரில் பங்கேற்பு
ஜெனீவாவில் அடுத்த மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 63வது அமர்வுகளில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இலங்கை குழு, கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் சிஇலங்கை குறித்த எழுத்துப்பூர்வமான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார். கொழும்பிலிருந்து செல்லும் தொழில்நுட்பக் குழு மற்றும் ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி பணியகத்துடன் இணைந்து, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், முந்தைய ஐ.நா. தீர்மானங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் […]













