இலங்கை செய்தி

மஹிந்த எடுத்த முடிவால் திண்டாடும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

எமிரேட்ஸ் விமான நிறுவனத்துடனான கூட்டாண்மை முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட 2008 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 528 பில்லியன் ரூபா ஒட்டுமொத்த நட்டத்தைச் சந்தித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எமிரேட்ஸ் விமான நிறுவனத்துடனான கூட்டாண்மை முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட 2008 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 528 பில்லியன் ரூபா ஒட்டுமொத்த நட்டத்தைச் சந்தித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (12) 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட உரையை நிகழ்த்தியபோதே ஜனாதிபதி மேற்படி தகவலை வெளியிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனிப்பட்ட பிரச்சினையொன்றின் காரணமாக எமிரேட்ஸ் நிறுவனத்துடனான கூட்டாண்மையை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்ததாகவும், அதன் பின்னரே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்ச்சியான நட்டத்தைச் சந்தித்து வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எமிரேட்ஸ் நிறுவனத்துடனான 10 ஆண்டுகால நிர்வாக ஒப்பந்தம் 2008ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து, தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் நிர்வாகப் பொறுப்பை இலங்கை அரசாங்கம் மீண்டும் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை