திருப்பரங்குன்றத்தில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றப்படவில்லை – மலையடிவாரத்தில் பெரும் பரபரப்பு
திருப்பரங்குன்றத்தில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் அன்று தீபமேற்றி வழிபட உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் இன்று தீபமேற்றப்படவில்லை.
மாறாக திருப்பரங்குன்றத்தில் மூலவரின் சிரசுக்கு நேர் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பெறும் பரபரப்பு ஏற்பட்டதுடன் மலை அடிவாரத்தில் இருந்த சிலர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இதன் போது போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.




