இந்தியாவில் நக்சலிசம் முடிவுக்கு வந்த பின்னர் கொண்டாடப்படும் முதலாவது தீபாவளியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடியுள்ளார். இந்தியா செய்தி

நக்சலிசம் முடிவுக்கு வந்த பின்னர் முதல் தீபாவளி: பிரதமர் மோடி

  • November 8, 2026
  • 0 Comments

இந்தியாவில் நக்சலிசம் முடிவுக்கு வந்த பின்னர் கொண்டாடப்படும் முதலாவது தீபாவளியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடியுள்ளார். நக்சலிசத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினரைச் சந்தித்த பிரதமர், நாட்டின் பாதுகாப்புக்காக அவர்கள் ஆற்றிய தியாகங்களையும் அர்ப்பணிப்பையும் பாராட்டியுள்ளார். இதன்போது உரையாற்றிய அவர், பல தசாப்தங்களாக நீடித்த நக்சலிசம் மற்றும் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா வெற்றிபெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், “நக்சலிசம் இல்லாத […]

இலங்கையின் முன்னாள் அரச புலனாய்வு சேவை தலைவர் சுரேஷ் சாலே மற்றும் ஆசாத் மௌலானா ஆகியோருக்கான அறை முன்பதிவுகள் மற்றும் கட்டணங்கள் தொடர்பான ஆவணங்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம், அஹுங்கல்லவில் உள்ள ஒரு விடுதி நிர்வாகத்திற்கு,உத்தரவிட்டுள்ளது. இலங்கை செய்தி

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் புதிய திருப்பம்: ஹோட்டல் பதிவுகளை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு

  • November 8, 2026
  • 0 Comments

இலங்கையின் முன்னாள் அரச புலனாய்வு சேவை தலைவர் சுரேஷ் சாலே மற்றும் ஆசாத் மௌலானா ஆகியோருக்கான அறை முன்பதிவுகள் மற்றும் கட்டணங்கள் தொடர்பான ஆவணங்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம், அஹுங்கல்லவில் உள்ள ஒரு விடுதி நிர்வாகத்திற்கு,உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்த மேலதிக அறிக்கையில் விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கோட்டை நீதிவான் பசன் அமரசேகர, குறித்த விடுதி நிர்வாகம் இந்த ஆவணங்களை வழங்க வேண்டும் என்று நேற்றுமுன்தினம் உத்தரவிட்டார். தற்போது […]

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தீபாவளி தினமான இன்று (நவம்பர் 8) சிக்கிமில் இந்திய இராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடியுள்ளார். இந்தியா செய்தி

இராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடிய இந்திய பாதுகாப்பு அமைச்சர்

  • November 8, 2026
  • 0 Comments

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தீபாவளி தினமான இன்று (நவம்பர் 8) சிக்கிமில் இந்திய இராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடியுள்ளார். நாதுலா கணவாய்க்கு அருகிலுள்ள ஷெராதாங் போர் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற அவர், நாட்டின் பாதுகாப்புக்காக உயிர்த் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அங்கு பணியாற்றும் வீரர்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதன்போது உரையாற்றிய அவர், நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் தியாகங்கள் […]

"ஜே.வி.பிக்குள் பிளவு ஏற்பட ஆரம்பித்துள்ளது. அக்கட்சி விரைவில் பிளவுபடும்" என்று தேசிய சுதந்திர முன்னணியின் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஜயந்த சமரவீர தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

ஜே.வி.பி. இரண்டாக பிளவுபடும்: அபாய சங்கு ஊதுகிறது விமலின் கட்சி

  • November 8, 2026
  • 0 Comments

“ஜே.வி.பிக்குள் பிளவு ஏற்பட ஆரம்பித்துள்ளது. அக்கட்சி விரைவில் பிளவுபடும்” என்று தேசிய சுதந்திர முன்னணியின் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஜயந்த சமரவீர தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கத்தின் மக்கள் செல்வாக்கு சரிவடைந்துள்ளது. இது தொடர்பான புலனாய்வுத் தகவல்களும் அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ளன. இதனால்தான் அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. ஜே.வி.பிக்குள்ளும் பிளவு […]

இந்தியாவில் உயிரிழந்த பெண் வேட்பாளர் ஒருவர், அவர் போட்டியிட்ட உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா செய்தி

உயிரிழந்த பின்பும் தேர்தலில் வென்ற 28 வயது வேட்பாளர்: இந்தியாவில் பெரும் சோகம்

  • November 8, 2026
  • 0 Comments

இந்தியாவில் உயிரிழந்த பெண் வேட்பாளர் ஒருவர், அவர் போட்டியிட்ட உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜன சேனா கட்சியின் வேட்பாளரான 28 வயதுடைய கரபாட்டி திவ்யா, ஆந்திரப் பிரதேசத்தின் துமந்தினிகுடெம் கிராமத்துக்கான MPTC உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டார். கடந்த நவம்பர் 5ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்ற பின்னர், திவ்யா திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் அவருக்கு வயிற்றுவலி இருப்பதாகக் கண்டறிந்த மருத்துவர்கள் மருந்துகளை வழங்கி வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். […]

நியூசிலாந்து பொதுத்தேர்தலில் எந்தவொரு பிரதான கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காததால், புதிய அரசாங்கத்தை அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. உலகம் செய்தி

நியூசிலாந்தில் ஆட்சியை தீர்மானிக்கப்போகும் வெளிநாட்டு வாக்குகள்

  • November 8, 2026
  • 0 Comments

நியூசிலாந்து பொதுத்தேர்தலில் எந்தவொரு பிரதான கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காததால், புதிய அரசாங்கத்தை அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் தலைமையிலான தேசியக் கட்சி 42 ஆசனங்களையும், முன்னாள் பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி 36 ஆசனங்களையும் பெற்றுள்ளன. தேசியக் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இணைந்து 67 ஆசனங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், எதிர்க்கட்சிகள் இணைந்து 63 ஆசனங்களைப் பெற்றுள்ளன. எனினும், வெளிநாடுகளில் இருந்து பதிவான வாக்குகள் உள்ளிட்ட சுமார் […]

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களான குட்டிமணி மற்றும் தங்கத்துரைக்கு வல்வெட்டித்துறையில் சிலை நிறுவுவதற்கு முயற்சிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் கந்தசாமி சதீஷிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் யாழ்ப்பாணத்திலுள்ள தமது அலுவலகத்தில்  நேற்று விசாரணை நடத்தியுள்ளனர். இலங்கை செய்தி

குட்டிமணி, தங்கத்துரைக்கு சிலை நிறுவ நிதி எங்கே இருந்து வந்தது? TID விசாரணை 

  • November 8, 2026
  • 0 Comments

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களான குட்டிமணி மற்றும் தங்கத்துரைக்கு வல்வெட்டித்துறையில் சிலை நிறுவுவதற்கு முயற்சிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் கந்தசாமி சதீஷிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் யாழ்ப்பாணத்திலுள்ள தமது அலுவலகத்தில்  நேற்று விசாரணை நடத்தியுள்ளனர். சுமார் மூன்று மணி நேரம் நீடித்த இந்த நீண்ட விசாரணையின்போது, அந்தச் சிலை நிறுவுவதற்கான நிதி மற்றும் அதற்கான மூலங்கள் எங்கிருந்து கிடைத்தன என்பது தொடர்பிலேயே தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன என்று தெரியவருகின்றது. […]

போலந்தின் தென்பகுதி நகரமான கிராகோவில் (Krakow) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

போலந்தை உலுக்கிய துப்பரிக்கிச்சூடு: பிரித்தானிய பிரஜையும் பலி – இரு நாட்கள் துக்க தினம்

  • November 8, 2026
  • 0 Comments

போலந்தின் தென்பகுதி நகரமான கிராகோவில் (Krakow) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர். சனிக்கிழமை (நவம்பர் 7) நகரின் பிரதான சதுக்கத்தில் காரில் வந்த துப்பாக்கிதாரி ஒருவர், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், துப்பாக்கிதாரியைச் சுட்டுப் பிடித்துள்ளனர். இச்சம்பவத்தில் நான்கு பெண்களும் இரண்டு ஆண்களும் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் அடங்குகின்றனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் பிரித்தானியப் […]

அமெரிக்கா மீண்டும் போரை ஆரம்பித்தால், அதற்குப் பேரழிவை ஏற்படுத்தும் வகையில் பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் பாதுகாப்புத் துறைத் தலைவர் மொஹ்சென் ரெசாயி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை செய்தி

அமெரிக்கா பேரழிவை சந்திக்கும்: ஈரான் எச்சரிக்கை

  • November 7, 2026
  • 0 Comments

அமெரிக்கா மீண்டும் போரை ஆரம்பித்தால், அதற்குப் பேரழிவை ஏற்படுத்தும் வகையில் பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் பாதுகாப்புத் துறைத் தலைவர் மொஹ்சென் ரெசாயி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “போரை ஆரம்பித்தால், பேரழிவைச் சந்திக்க நேரிடும்” எனக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் போரால் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார் என்றும், வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ பதவியிலிருந்து வெளியேறத் தயாராகி வருவதாகவும் […]

போலந்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கிராகோவ் நகரின் பிரதான சந்தைச் சதுக்கத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர். ஐரோப்பா செய்தி

போலந்தில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி, 10 பேர் காயம்

  • November 7, 2026
  • 0 Comments

போலந்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கிராகோவ் நகரின் பிரதான சந்தைச் சதுக்கத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர். தீயணைப்புப் படையினரை மேற்கோள்காட்டி TVN24 ஊடகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், உள்துறை அமைச்சின் ஊடாக நிலைமைகள் குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டு வருவதாகவும் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார். இது பயங்கரவாதத் […]