ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

போலந்தை உலுக்கிய துப்பரிக்கிச்சூடு: பிரித்தானிய பிரஜையும் பலி – இரு நாட்கள் துக்க தினம்

போலந்தின் தென்பகுதி நகரமான கிராகோவில் (Krakow) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர்.

போலந்தின் தென்பகுதி நகரமான கிராகோவில் (Krakow) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர்.

சனிக்கிழமை (நவம்பர் 7) நகரின் பிரதான சதுக்கத்தில் காரில் வந்த துப்பாக்கிதாரி ஒருவர், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், துப்பாக்கிதாரியைச் சுட்டுப் பிடித்துள்ளனர். இச்சம்பவத்தில் நான்கு பெண்களும் இரண்டு ஆண்களும் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் அடங்குகின்றனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் பிரித்தானியப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், காயமடைந்த வெளிநாட்டுப் பிரஜைகள் ஐவர் ஆஸ்திரியா, ஜேர்மனி, போர்த்துக்கல், ரஷ்யா மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலை நடத்தியவர் 24 வயதுடைய போலந்துப் பிரஜை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் இராணுவப் பாணியிலான ஆடைகளை அணிந்திருந்ததுடன், இராணுவத் தரத்திலான ஆயுதங்களையும் பயன்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. AR-15 ரக துப்பாக்கியைப் பயன்படுத்திய அவர், துப்பாக்கி வைத்திருப்பதற்கான அனுமதியையும் பெற்றிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, துப்பாக்கிதாரி வசித்து வந்த ஒஸ்ட்ரோவியெக் ஸ்வியெண்டோக்ரிஸ்கி (Ostrowiec Swietokrzyski) நகரிலுள்ள அவரது வீட்டில் மேலும் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இரண்டு பெண்கள் மற்றும் ஓர் ஆணின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் துப்பாக்கிதாரியின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களாக இருக்கலாம் எனப் பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிதாரி தீவிர வலதுசாரி சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என உள்துறை அமைச்சர் மார்சின் கியர்வின்ஸ்கி தெரிவித்துள்ளார். எனினும், தாக்குதலுக்கான உண்மையான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

துப்பாக்கிச் சூடு தொடர்பான தகவல் கிடைத்த மூன்றே நிமிடங்களில் பொலிஸார் சம்பவ இடத்தை அடைந்து துப்பாக்கிதாரியைச் சுட்டுப் பிடித்ததாகவும், இதன்மூலம் பாரிய உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாகவும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து நவம்பர் 8 மற்றும் 9ஆம் திகதிகளை தேசிய துக்க தினங்களாக அறிவிக்க ஜனாதிபதி கரோல் நவ்ரோக்கி தீர்மானித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி