இந்தியா செய்தி

இராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடிய இந்திய பாதுகாப்பு அமைச்சர்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தீபாவளி தினமான இன்று (நவம்பர் 8) சிக்கிமில் இந்திய இராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடியுள்ளார்.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தீபாவளி தினமான இன்று (நவம்பர் 8) சிக்கிமில் இந்திய இராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடியுள்ளார்.

நாதுலா கணவாய்க்கு அருகிலுள்ள ஷெராதாங் போர் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற அவர், நாட்டின் பாதுகாப்புக்காக உயிர்த் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அங்கு பணியாற்றும் வீரர்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதன்போது உரையாற்றிய அவர், நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் தியாகங்கள் அளப்பரியவை எனக் குறிப்பிட்டார்.

மேலும், “நீங்கள் நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதால் தான் மக்கள் தங்கள் வீடுகளில் தீபங்களை ஏற்றி நிம்மதியாகத் தீபாவளியைக் கொண்டாட முடிகிறது. உங்களால்தான் தீபாவளி விளக்குகள் இன்னும் பிரகாசமாகத் தெரிகின்றன” எனத் தெரிவித்தார்.

இராணுவ வீரர்கள் அமைதியாகத் தமது கடமைகளை ஆற்றினாலும், அவர்களின் பாதுகாப்புப் பணிகள் நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் சென்றடைகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு முன்னேறினாலும், இராணுவத்தின் மிகப்பெரிய பலம் ஒழுக்கமே என வலியுறுத்திய ராஜ்நாத் சிங், உள்ளூர் மக்களுடன் நல்லுறவைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

மேலும், ஷெராதாங் போர் நினைவிடத்தில் உயிர்த் தியாகம் செய்த வீரர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும், நாட்டைப் பாதுகாக்கும் ஒரே நோக்கத்துடன் உயிரைக் கொடுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வில் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத் உள்ளிட்ட மூத்த இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி