நியூசிலாந்தில் ஆட்சியை தீர்மானிக்கப்போகும் வெளிநாட்டு வாக்குகள்
நியூசிலாந்து பொதுத்தேர்தலில் எந்தவொரு பிரதான கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காததால், புதிய அரசாங்கத்தை அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் தலைமையிலான தேசியக் கட்சி 42 ஆசனங்களையும், முன்னாள் பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி 36 ஆசனங்களையும் பெற்றுள்ளன.
தேசியக் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இணைந்து 67 ஆசனங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், எதிர்க்கட்சிகள் இணைந்து 63 ஆசனங்களைப் பெற்றுள்ளன.
எனினும், வெளிநாடுகளில் இருந்து பதிவான வாக்குகள் உள்ளிட்ட சுமார் 4 இலட்சம் விசேட வாக்குகள் இன்னும் எண்ணப்பட வேண்டியுள்ளதால், தேர்தல் முடிவுகளில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதி தேர்தல் முடிவுகள் நவம்பர் 27ஆம் திகதி வெளியாகவுள்ளன.
இதற்கிடையில், ஆட்சியமைப்பதில் தீர்மானிக்கும் சக்தியாக Opportunity கட்சி உருவெடுத்துள்ளது. அக்கட்சியின் ஆதரவைப் பெறுவதற்கு இரு பிரதான அரசியல் அணிகளும் முயற்சிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.




