அரசியல் இலங்கை செய்தி

ஜே.வி.பி. இரண்டாக பிளவுபடும்: அபாய சங்கு ஊதுகிறது விமலின் கட்சி

"ஜே.வி.பிக்குள் பிளவு ஏற்பட ஆரம்பித்துள்ளது. அக்கட்சி விரைவில் பிளவுபடும்" என்று தேசிய சுதந்திர முன்னணியின் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

“ஜே.வி.பிக்குள் பிளவு ஏற்பட ஆரம்பித்துள்ளது. அக்கட்சி விரைவில் பிளவுபடும்” என்று தேசிய சுதந்திர முன்னணியின் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசாங்கத்தின் மக்கள் செல்வாக்கு சரிவடைந்துள்ளது. இது தொடர்பான புலனாய்வுத் தகவல்களும் அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ளன. இதனால்தான் அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.

ஜே.வி.பிக்குள்ளும் பிளவு ஏற்பட ஆரம்பித்துள்ளது. விரைவில் அக்கட்சியும் பிளவுபடும். மனசாட்சியுள்ள மக்கள் அக்கட்சிக்குள் இருக்கின்றனர்.

நான் தேசிய மக்கள் சக்தியைக் குறிப்பிடவில்லை. ஜே.வி.பியையே குறிப்பிடுகின்றேன். ஏனெனில், தேசிய மக்கள் சக்தி ஏற்கனவே பிளவுபட ஆரம்பித்துவிட்டது” என்றார் ஜயந்த சமரவீர.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை