திருகோணமலை மொரவெவ குளத்துக்கு மீன்பிடிக்கச் சென்றவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து இன்று வெள்ளிக்கிழமை (17) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

  • July 17, 2026
  • 0 Comments

திருகோணமலை மொரவெவ குளத்துக்கு மீன்பிடிக்கச் சென்றவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து இன்று வெள்ளிக்கிழமை (17) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வியாழக்கிழமை 16ஆம் திகதி காலை 10.00 மணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற மீனவர் வீடு திரும்பாத நிலையில் இன்று (17) வெள்ளிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் திருகோணமலை நாமல்வத்தை பகுதியில் வசித்து வரும் முகம்மது உசன் ஜபருள்ளா கான் (63வயது) எனவும் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலத்தை திடீர் மரண விசாரணை அதிகாரி […]

வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகத் தவறியதைத் தொடர்ந்து, நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண மற்றும் மேலும் நால்வரைக் கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது. இலங்கை செய்தி

பிரதி அமைச்சர் உட்பட அறுவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

  • July 17, 2026
  • 0 Comments

வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகத் தவறியதைத் தொடர்ந்து, நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண மற்றும் மேலும் நால்வரைக் கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது. தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இந்த ஆறு சந்தேகநபர்களும், நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டங்களில் பங்கேற்றமை மற்றும் சட்டவிரோதக் கூட்டமொன்றில் உறுப்பினர்களாக இருந்தமை போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர். மேலதிக நீதவான் கிங்ஸ்லி ஹெட்டியாரச்சி, பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் […]

ஐரோப்பா

பதவி விலகல் – மனம் திறந்தார் ஸ்டாமர்

  • July 17, 2026
  • 0 Comments

பிரதமர் கெயர் ஸ்டாமர் தான் பதவி விலகுவதற்கான உண்மையான காரணத்தை நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அரசாங்கம் “ஒரு பெரிய சண்டைக்குள் சிதைந்து போவதைத்” தடுக்கவும், “ஒழுங்கான ஆட்சி மாற்றத்தை” உறுதி செய்யவும் தாம் பதவி விலக முடிவு செய்ததாக அவர் கூறினார். பொருளாதாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், NHS காத்திருப்புப் பட்டியல்கள் குறைக்கப்பட்டது, மற்றும் குழந்தை வறுமையை ஒழிக்கும் முயற்சிகள் உள்ளிட்ட தனது பதவிக்காலத்தின் முக்கிய வெற்றிகளையும் அவர் இந்த நேர்காணலின்போது நினைவுக்கூர்ந்தார். தனது சாதனைகளில் பெருமிதம் […]

ஐரோப்பா

கடும் வெப்ப அலையை தொடர்ந்து கொட்டித் தீர்த்த மழை – பிரான்ஸில் இருவர் பலி

  • July 17, 2026
  • 0 Comments

நீண்டகால வெப்ப அலையைத் தொடர்ந்து, பிரான்சில் நேற்றிரவு கடும் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செயின்ட்-விக்டர்னியனில் ( Saint-Victurnien) மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், டோலோமியூவில் (Dolomieu) மின்னல் தாக்கியதில் மற்றொருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி திடீர் மழை காரணமாக 53,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தென்கிழக்கு பிரான்சில்  முன்னர் பாதிக்கப்பட்ட அனைத்து மாகாணங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை மெட்டியோ-பிரான்ஸ் நீக்கியுள்ளது.

இலங்கை செய்தி

அஸ்வெசும திட்டத்தை பயன்படுத்தி மோசடி – மக்களுக்கு எச்சரிக்கை

  • July 17, 2026
  • 0 Comments

அஸ்வெசும பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைத் தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான மோசடி நடவடிக்கைகள் குறித்து நலவாழ்வு நலன்கள் வாரியம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சிறப்பு அறிக்கையில், பல்வேறு பகுதிகளில் உள்ள நபர்கள், வாரியத்தின் தலைமை அலுவலக அதிகாரிகள் போல் நடித்து, வெவ்வேறு தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி அஸ்வெசும பயனாளிகளைத் தொடர்புகொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அழைப்பவர்கள் பயனாளிகளின் தகவல்களைப் புதுப்பிப்பதாகக் கூறுவது அல்லது பெறுநர்களிடமிருந்து பணத்தைக் கோருவதற்காக வேறு காரணங்களைக் கூறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள் […]

உலகம் முக்கிய செய்திகள்

ஜெலன்ஸ்கியின் முடிவுக்கு எதிராக உக்ரைனின் தலைநகரில் மக்கள் போராட்டம்

  • July 17, 2026
  • 0 Comments

உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் மைக்கலோ ஃபெடோரோ (Mykhailo Fedorov) பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் தெருக்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெனரல் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கியுடன் (Oleksandr Syrskyi)  ஏற்பட்ட பகிரங்கமான கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து,  பாதுகாப்பு அமைச்சர் பதவிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. நவீன ட்ரோன் தொழில்நுட்பத்தை மேம்படுத்திய ஃபெடோரோவின் நீக்கம் அந்நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவைக் கண்டித்தே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே உக்ரேனின் SBU உள்நாட்டுப் பாதுகாப்புச் சேவையின் […]

இந்தியாவின் முதலா​வது ஹைட்​ரஜன் ரயிலை பிரதமர் நரேந்​திர மோடி, ஹரியானாவின் ஜிந்த் பகுதியில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தியா செய்தி

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

  • July 17, 2026
  • 0 Comments

இந்தியாவின் முதலா​வது ஹைட்​ரஜன் ரயிலை பிரதமர் நரேந்​திர மோடி, ஹரியானாவின் ஜிந்த் பகுதியில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜிந்த் ரயில் நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஹரியானா ஆளுநர் அசிம் குமார் கோஷ், முதல்வர் நயாப் சிங் சைனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்ததை அடுத்து, ஜிந்த் ரயில் நிலையத்தில் இருந்து சோனிபட் ரயில் நிலையத்தை நோக்கி ஹைட்ரஜன் […]

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் தமிழர் திருநாளாம் ஆடிப்பிறப்புப் பெருவிழா இன்று (17.07.2026) வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இலங்கை செய்தி

வடக்கில் ஆடிப்பிறப்புப் பெருவிழா

  • July 17, 2026
  • 0 Comments

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் தமிழர் திருநாளாம் ஆடிப்பிறப்புப் பெருவிழா இன்று (17.07.2026) வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் சிறப்பான ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த பாரம்பரிய நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்து சிறப்பித்தார். அத்துடன், இந்நிகழ்வின் சிறப்புப் பேச்சாளராக பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் பங்கேற்றிருந்தார். நிகழ்வின் ஆரம்பமாக ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்களின் வரவேற்புரை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து […]

வடக்கு மாகாணத்தில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது என்றும், அவர்களுக்கு எதிராகச் சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்யும் என்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

கிளிநொச்சி சம்பவம்: ஜனாதிபதியிடமிருந்து அமைச்சருக்கு பறந்த அழைப்பு

  • July 17, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது என்றும், அவர்களுக்கு எதிராகச் சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்யும் என்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் 35 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ், வடக்கு மாகாணத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட உதவித்திட்டங்களின் முதற்கட்ட நிகழ்வு இன்று (17.07.2026) […]

உலகம்

சீனாவில் நிலச்சரிவு – ஏராளமானோர் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக தகவல்

  • July 17, 2026
  • 0 Comments

சீனாவின் தென்மேற்கு நகரமான சோங்கிங்கில் (Chongqing) உள்ள மாவட்டமொன்றில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமானவர்கள் மண்ணுக்குள் புதையுண்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. நிலச்சரிவை தொடர்ந்து 60 இற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை வெளியேற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதேநேரம் இதுவரை ஒன்பது பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலச்சரிவுக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. சீனாவின் அவசரகால மேலாண்மை அமைச்சகம் இரண்டாம் நிலை அவசரகால நடவடிக்கையைச் செயல்படுத்தி, 100 பேர் கொண்ட மீட்புக் […]