பிரதி அமைச்சர் உட்பட அறுவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகத் தவறியதைத் தொடர்ந்து, நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண மற்றும் மேலும் நால்வரைக் கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.
தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இந்த ஆறு சந்தேகநபர்களும், நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டங்களில் பங்கேற்றமை மற்றும் சட்டவிரோதக் கூட்டமொன்றில் உறுப்பினர்களாக இருந்தமை போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்.
மேலதிக நீதவான் கிங்ஸ்லி ஹெட்டியாரச்சி, பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண, ரொஷான் அலி தனிஷ் அலி, அமல் சலிந்த எனப்படும் “ஆர்மி அமிலா”, உதயங்க குமார மற்றும் வணக்கத்திற்குரிய கோஸ்வத்தே மகாநாம தேரர் ஆகியோரை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பித்தார்.
அத்துடன், சந்தேகநபர்களுக்காக பிணை நின்ற பிணையாளர்களுக்கு நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளதுடன், இந்த வழக்கை 2026 டிசம்பர் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.




