ஆஸ்திரேலியாவில் இஸ்லாமோபோபியா (Islamophobia) தொடர்பான சிறப்புத் தூதரின் அறிக்கை குறித்து அல்பானிஸ் அரசாங்கம் தனது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பதிலை சனிக்கிழமை (18) வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட திருத்தக் கோரிக்கையை நிராகரித்தது ஆஸ்திரேலியா அரசு

  • July 18, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் இஸ்லாமோபோபியா (Islamophobia) தொடர்பான சிறப்புத் தூதரின் அறிக்கை குறித்து அல்பானிஸ் அரசாங்கம் தனது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பதிலை சனிக்கிழமை (18) வெளியிட்டுள்ளது. இதில், நாட்டின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை மாற்றி அமைப்பதற்கான கோரிக்கைகளை நிராகரித்துள்ள அரசாங்கம், அதற்குப் பதிலாக கல்வி சார்ந்த ஒரு புதிய பணிக்குழுவை அமைப்பதற்கும், காவல்துறையின் சமூகத் தொடர்புப் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும் முன்னுரிமை அளித்துள்ளது. கல்வி மற்றும் விழிப்புணர்வு, பாதுகாப்பு மற்றும் ஆதரவு, சமூக ஒற்றுமை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய துறைகளின் கீழ் […]

உலகம்

ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முயன்ற இரு எண்ணெய் கப்பல்கள் தீப்பற்றி எரிவதாக தகவல்

  • July 18, 2026
  • 0 Comments

ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முயன்ற இரண்டு எண்ணெய் கப்பல்கள் வெடி விபத்துகளுக்குப் பிறகு தீப்பிடித்து எரிவதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. குறிப்பாக கடல்சார் கண்காணிப்பை மேற்கொள்ளும் ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் (UKMTO) அமைப்பிடமிருந்து எந்த தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை. இருப்பினும் ​அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு காரணமாக, இந்த நீர்வழிப்பாதை “மிகவும் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது என ஈரானிய புரட்சிகர காவல் படை (IRGC)  அறிவித்துள்ளது. ​தெற்குப் பகுதியில் “பரவலாக கண்ணிவெடிகள் […]

யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியைப் பார்வையிட நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு வருகை தரவுள்ளது. இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

செம்மணியில் களமிறங்குகிறது ஐரோப்பிய தூதுக்குழு

  • July 18, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியைப் பார்வையிட நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு வருகை தரவுள்ளது. இந்த மாதம் 22 ஆம் திகதி புதன்கிழமை பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதுவர்களே செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவர் எனத் தெரியவருகின்றது. யாழ்ப்பாணத்துக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி வருகை தரும் மேற்படி குழுவினர், 22 ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் […]

தமது உரிமைகளுக்காகத் தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்தாலும், ஐக்கிய மக்கள் கூட்டணியுடனான அவர்களின் பயணத்தில் எவ்வித தாக்கமும் ஏற்படாது. அவர்கள் தொடர்ந்து எம்முடன் இணைந்தே பயணிப்பார்கள்" என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைவு: சஜித் கூட்டணிக்குள் குழப்பமா?

  • July 18, 2026
  • 0 Comments

தமது உரிமைகளுக்காகத் தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்தாலும், ஐக்கிய மக்கள் கூட்டணியுடனான அவர்களின் பயணத்தில் எவ்வித தாக்கமும் ஏற்படாது. அவர்கள் தொடர்ந்து எம்முடன் இணைந்தே பயணிப்பார்கள்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: “தமிழ் பேசும் கட்சிகள் எம்முடன் ஐக்கிய மக்கள் கூட்டணியாகவே செயற்பட்டு வருகின்றன. எமது தரப்புடன் அந்தக் கட்சிகளுக்கு எவ்விதப் பிரச்சினையும் கிடையாது. தமது உரிமைகள் மற்றும் கோரிக்கைகளை […]

கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த சகலதுறை ஆட்டக்காரரும், விளையாட்டு உலகின் ஈடு இணையற்ற அடையாளமுமான சர் கேரி சோபர்ஸ் (Sir Garry Sobers) தனது 89ஆவது வயதில் பார்படாஸில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். செய்தி விளையாட்டு

கிரிக்கெட் வரலாற்றின் ஆகச்சிறந்த சகாப்தம் நிறைவு: Sir Garry Sobers காலமானார்

  • July 18, 2026
  • 0 Comments

கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த சகலதுறை ஆட்டக்காரரும், விளையாட்டு உலகின் ஈடு இணையற்ற அடையாளமுமான சர் கேரி சோபர்ஸ் (Sir Garry Sobers) தனது 89ஆவது வயதில் பார்படாஸில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். கிரிக்கெட் விளையாடிய வீரர்களிலேயே மிகவும் திறமை வாய்ந்த, தலைசிறந்த சகலதுறை ஆட்டக்காரராகக் கருதப்படும் சோபர்ஸ், டெஸ்ட் போட்டிகளில் ஒரு சிறந்த பேட்டராக மட்டுமன்றி, இடதுகை வேகப்பந்து வீச்சாளராகவும், சுழற்பந்து (Orthodox and Wrist-spin) வீச்சாளராகவும் ஜொலித்தார். அத்தோடு, களத்தடுப்பிலும் (Fielding) மிக நெருக்கமான […]

உலகம்

நோர்வேயில் காட்டுத்தீ பரவல் – 100 வீடுகள் தீக்கிரை

  • July 18, 2026
  • 0 Comments

நோர்வேயில் உள்ள டிராம்மன்  (Drammen) நகருக்கு அருகே நேற்று பாரிய காட்டுத்தீ பரவியுள்ளது. இதனால் சுமார் 100 வீடுகள் தீக்கரையானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓஸ்லோவிலிருந்து சுமார் 50 கி.மீ (30 மைல்) தொலைவில் மேற்கே அமைந்துள்ள அப்பகுதியை அடர்த்தியான கருப்புப் புகை சூழ்ந்திருப்பதை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள காணொளிகள் புலப்படுத்துகின்றன. இருப்பினும் மேற்படி காட்டுத்தீயினால் உயிர் இழப்புகள் ஏற்படவில்லை என மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். அறுபதிற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், தீயை […]

விளையாட்டு

FIFA வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் தங்க மோதிரங்கள்!

  • July 18, 2026
  • 0 Comments

2026 FIFA உலகக் கோப்பை சாம்பியன்களுக்கு கோப்பையுடன் கூடுதலாக ‘சாம்பியன்ஷிப் மோதிரங்களையும்’ வழங்க கால்பந்து கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் இவ்வாறு மோதிரம் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். அதன்படி, இந்த ஆண்டு உலகக் கோப்பை சாம்பியன் அணிக்கு 30 மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன. இருப்பினும், மேலும் 1,996 மோதிரங்கள் விளையாட்டு ரசிகர்களுக்கு விற்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதிரங்களின் மொத்த எண்ணிக்கை 2,026 என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகம்

ஈரான் மீதான தாக்குதல்களுக்கு 13000 குண்டுகளை பயன்படுத்திய அமெரிக்கா

  • July 17, 2026
  • 0 Comments

அமெரிக்கப் படைகள் ஆறாவது நாளாக ஈரான் மீதான தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர். இதில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டும், 20 பேர் காயமடைந்தும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சமீபத்திய உயிரிழப்பு எண்ணிக்கை 40-ஐ நெருங்கியுள்ளதாகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 400ஐக் கடந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாலங்கள், விமான நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் ஒரு ரயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்களின் உள்கட்டமைப்புகள் மீது குண்டுவீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றமையால் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா சமீபத்திய தாக்குதல்களில் […]

ஐரோப்பா

உட்கட்சி பூசல்களை ஒழித்து தனித்துவமான பாதையில் பயணத்தை தொடர பர்ன்ஹாம் அழைப்பு

  • July 17, 2026
  • 0 Comments

இது தொழிலாளர் கட்சிக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு எனவும்,  புதிய அரசியலைக் கட்டமைப்பேன் என்றும் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார். தொழிலாளர் கடச்சியின் தலைவராக இன்று பொறுப்பேற்ற பர்ன்ஹாம் கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் ஆற்றிய உரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இதுவரை காலமும் நாட்டிற்கு ஆற்றிய சேவைக்காக பிரதமர் கெய்ர் ஸ்டாமருக்கு நன்றிக் கூறினார். கட்சியை ஒன்றிணைத்து, உட்கட்சிப் பூசல்களை ஒழித்து, கன்சர்வேடிவ் கட்சியின் கொள்கைகளுக்கு மிகவும் நெருக்கமானதாகக் கருதப்படும் கொள்கைகளிலிருந்து விலகி, […]

ஐரோப்பா

கருங்கடலில் நிழல் கப்பற்படை கப்பல்களுக்கு குறி – ரஷ்யாவின் புதிய வியூகம்

  • July 17, 2026
  • 0 Comments

ரஷ்யா தங்களின் “நிழல் கப்பற்படை” கப்பல்கள் தாக்கப்படுவதைத் தடுப்பதற்காக, வான்வழித் தாக்குதல் எதிர்ப்புப் படையினரைக் கொண்டு ஆயுதம் ஏந்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களாக  உக்ரைனின் ஆளில்லா அமைப்புப் படைகள் (USF),  கருங்கடல் மற்றும் அசோவ் கடல்களில் இயங்கி வந்த 147 ரஷ்யக் கப்பல்களைத் தாக்கியுள்ளன. நேற்று இரவு மேலும் ஆறு கப்பல்கள் தாக்கப்பட்டன. உக்ரைனின் இந்த நடவடிக்கை காரணமாக ரஷ்யாவிற்கான எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொருளாதார பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தங்களின் கப்பல்கள் […]