ஐரோப்பா

கிரீஸில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரு ஹெலிகாப்டர்கள் விபத்து

ஏதென்ஸுக்கு மேற்கே இரண்டு தீயணைப்பு ஹெலிகாப்டர்கள்  ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

வரலாறு காணாத வெப்ப அலை காரணமாக கிரீஸ் காட்டுத்தீயுடன் போராடி வருகின்றது. இந்நிலையில் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரு ஹெலிகாப்டர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

தீயணைப்புத் துறையால் வாடகைக்கு எடுக்கப்பட்டு, நான்கு பணியாளர்களுடன் பயணித்த இரண்டு பெல் ஹெலிகாப்டர்கள், ப்சாதா  (Psatha) பகுதியில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது நடுவானில் மோதிக்கொண்டதாக தீயணைப்புத் துறை தெரிவித்தது.

பணியாளர்களைக் கண்டுபிடிப்பதற்காக தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டன.

விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்