ஜெலன்ஸ்கியின் முடிவுக்கு எதிராக உக்ரைனின் தலைநகரில் மக்கள் போராட்டம்
உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் மைக்கலோ ஃபெடோரோ (Mykhailo Fedorov) பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் தெருக்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜெனரல் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கியுடன் (Oleksandr Syrskyi) ஏற்பட்ட பகிரங்கமான கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சர் பதவிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
நவீன ட்ரோன் தொழில்நுட்பத்தை மேம்படுத்திய ஃபெடோரோவின் நீக்கம் அந்நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முடிவைக் கண்டித்தே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே உக்ரேனின் SBU உள்நாட்டுப் பாதுகாப்புச் சேவையின் தற்காலிகத் தலைவரான யெவ்ஹெனி க்மாராவை தற்காலிக பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கவும் செலன்ஸ்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.




