மெக்சிகோவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு – சுனாமி எச்சரிக்கை அமுலில்
மெக்சிகோவின் தெற்கு மாநிலமான சியாபாஸின் (Chiapas) கடற்கரைக்கு அருகில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது 7.4 ரிக்டர் அளவுக்கோளில் பதிவாகியுள்ளதுடன், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவின் புவேர்ட்டோ மடேரோ ( Puerto Madero) நகருக்கு அருகில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 10 கிமீ (6 மைல்கள்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வைத் தொடர்ந்து, நிலநடுக்க மையத்திலிருந்து 300 கிமீ (186 மைல்கள்) தொலைவிற்குள் […]













