அணுமின் நிலையத்தை மூடும் ஹங்கேரி – மின்விநியோகத் தடை
40 ஆண்டுகளில் முதல் முறையாக ஹங்கேரி தனது அணுமின் நிலையத்தை மூடியுள்ளது.
புதிய வெப்ப அலை உருவாகும் அபாயம் உள்ள நிலையில், டானூப் நதி வறண்டு வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஹங்கேரி ஒரு நெருக்கடியான நாட்களை எதிர்கொள்கிறது என்று பிரதமர் பீட்டர் மாக்யார் (Peter Magyar) இன்று தெரிவித்தார்.
இதற்கமைய ஹங்கேரியில் 05 நாட்களுக்கு மின் விநியோகம் தடைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பாவின் பெரும் பகுதிகள் நீடித்த வெப்பம் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நதிநீர் குறைந்துள்ள நிலையில், நீர் விநியோகம், நதிவழிப் போக்குவரத்து மற்றும் மின் உற்பத்தி ஆகியன பாதிக்கப்பட்டுள்ளன.




