ஐரோப்பா

கடும் வெப்ப அலையை தொடர்ந்து கொட்டித் தீர்த்த மழை – பிரான்ஸில் இருவர் பலி

நீண்டகால வெப்ப அலையைத் தொடர்ந்து, பிரான்சில் நேற்றிரவு கடும் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

இதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செயின்ட்-விக்டர்னியனில் ( Saint-Victurnien) மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், டோலோமியூவில் (Dolomieu) மின்னல் தாக்கியதில் மற்றொருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி திடீர் மழை காரணமாக 53,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தென்கிழக்கு பிரான்சில்  முன்னர் பாதிக்கப்பட்ட அனைத்து மாகாணங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை மெட்டியோ-பிரான்ஸ் நீக்கியுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்