உலகம்

சீனாவில் நிலச்சரிவு – ஏராளமானோர் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக தகவல்

சீனாவின் தென்மேற்கு நகரமான சோங்கிங்கில் (Chongqing) உள்ள மாவட்டமொன்றில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதில் ஏராளமானவர்கள் மண்ணுக்குள் புதையுண்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

நிலச்சரிவை தொடர்ந்து 60 இற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை வெளியேற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதேநேரம் இதுவரை ஒன்பது பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலச்சரிவுக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

சீனாவின் அவசரகால மேலாண்மை அமைச்சகம் இரண்டாம் நிலை அவசரகால நடவடிக்கையைச் செயல்படுத்தி, 100 பேர் கொண்ட மீட்புக் குழுவைச் சம்பவ இடத்திற்கு அனுப்பியதாக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக, சீனாவின் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையைச் சேர்ந்த சுமார் 206 பணியாளர்களும் 49 வாகனங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அமைச்சகம் கூறியது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்