இந்தோனேசியாவில் நடு கடலில் தீப்பிடித்து எரிந்த படகு – ஐவர் வலி, பலர் மாயம்
இந்தோனேசியாவின் மதுரா தீவுக்கு அருகே படகு ஒன்று தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது..
இதில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததாகவும், 41 பேரை காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஜாவா மாகாணத்தின் சுரபயாவிலிருந்து (Surabaya) தெற்கு சுலவேசியின் (Sulawesi) மக்காசர் (Makassar) நகருக்குச் சென்று கொண்டிருந்த படகே இன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
படகில் தீவிபத்து ஏற்பட்டமைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை எனவும், தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீப்பிடித்தபோது அந்தப் படகில் 271 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்களில் 225 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




