காட்டுமிராண்டிகளுடன் இராஜதந்திர ஒப்பந்தத்திற்கு வாய்ப்பே இல்லை – நெதன்யாகு
“காட்டுமிராண்டிகளுடன்” ஒரு இராஜதந்திர ஒப்பந்தத்திற்கு வாய்ப்பில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடைகளை பாராட்டிய அவர், இந்த கருத்தை முன்வைத்துள்ளார். ட்ரம்புடன் சமீபத்தில் நடந்த சந்திப்பு குறித்து விவரித்த நெதன்யாகு, இஸ்லாமியக் குடியரசுடன் ராஜதந்திரம் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தாங்கள் விவாதித்ததாகக் கூறினார். “இருப்பினும், அங்குள்ள அந்தக் குழுவினருடனும், அந்த காட்டுமிராண்டிகளுடனும் ஒரு உடன்பாடு எட்டப்படும் என்பதில் எனக்குச் சந்தேகம் உள்ளது” என்றும் நெதன்யாகு விவரித்தார். […]













