மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு
திருகோணமலை மொரவெவ குளத்துக்கு மீன்பிடிக்கச் சென்றவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து இன்று வெள்ளிக்கிழமை (17) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை 16ஆம் திகதி காலை 10.00 மணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற மீனவர் வீடு திரும்பாத நிலையில் இன்று (17) வெள்ளிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் திருகோணமலை நாமல்வத்தை பகுதியில் வசித்து வரும் முகம்மது உசன் ஜபருள்ளா கான் (63வயது) எனவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலத்தை திடீர் மரண விசாரணை அதிகாரி சுபைர் ஷாபி நேரில் சென்று பார்வையிட்டு விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.




