இலங்கை செய்தி

பிரதம நீதியரசரின் பதவிகாலத்தை 6 ஆண்டுகளாக நிர்ணயிக்கத் திட்டம்

பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் வரையறுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் வரையறுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அனைத்து நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் நோக்கில், அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ள திருத்தங்களின் ஒரு பகுதியாக இது அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் பதவிக்கு அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் பதவிக்காலத்தை நிர்ணயிக்கும் இந்த நடவடிக்கையினால், ஓய்வு பெறும் வயதை எட்டாவிட்டாலும் கூட, பிரதம நீதியரசர் ஆறு ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்த பின்னர் பதவி விலக வேண்டும்.

முன்மொழியப்பட்ட திருத்தங்களின்படி, உயர்நீதிமன்ற நீதியரசரின் ஓய்வு பெறும் வயது 65இல் இருந்து 67 ஆகவும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 இல் இருந்து 65 ஆகவும் உயர்த்தப்படும்.

மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதும் இரண்டு ஆண்டுகள் அதிகரிக்கப்படும்.

சட்டமா அதிபரின் ஒப்புதலுக்குப் பின்னர், அடுத்த மாத தொடக்கத்தில் இந்த முன்மொழியப்பட்ட திருத்தங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் .

இந்த முன்மொழிவுகள் ஏற்கனவே அரசாங்க சட்ட வரைவாளருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

நவம்பர் மாதம் வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் இந்தச் செயல்முறையை நிறைவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை