உலகம்

உகாண்டாவில் சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம் – 20 பேர் உயிரிழப்பு

உகாண்டாவில் கல்விச் சுற்றுலா சென்ற மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை கப்சோர்வா (Kapchorwa )  மாநிலத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தில் இயந்திரக் கோளாறு இருந்ததாகவும், இதன்காரணமாக ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் விபத்து தொடர்பான விசாரணை நிறைவடையும்வரை  அனைத்து சுற்றுலாக்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கல்வி அமைச்சர் ஜான் கிறிசோஸ்டம் முயிங்கோ (John Chrysostom Muyingo) “உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நமது குழந்தைகளின் பாதுகாப்பிற்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும், என்று வலியுறுத்தியுள்ளார்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்