ஐரோப்பா

காட்டுத்தீ அபாயம் – நீராவி ரயில்களை இரத்து செய்தது பிரித்தானியா

பிரித்தானியாவில் நீண்டகாலமாக இயங்கிவந்த நீராவி ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

குறித்த ரயில்கள் காட்டுத்தீயை ஏற்படுத்தும் என்ற அச்சத்தின் காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாரி பாட்டர் ரயில் என்று அழைக்கப்படும் வெஸ்ட் கோஸ்ட் ரயில்வேயின் ரயில் ஒன்று காட்டுத்தீயை ஏற்படுத்தியதாக நம்பப்படுகின்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இந்த ஆண்டு 342 காட்டுத்தீ சம்பவங்களுக்குப் பதிலளித்துள்ளன.

மேலும், இங்கிலாந்தில் தீவிர வானிலை நிகழ்வுகள் புதிய நிலைக்கு  மாறி வருவதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்