இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 11 எலும்புக் கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று முன்னெடுக்கப்பட்ட 35 வது நாள் அகழ்வுப் பணியின் போது, 11 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று முன்னெடுக்கப்பட்ட 35 வது நாள் அகழ்வுப் பணியின் போது, 11 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதையடுத்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 431 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 7 மனித எலும்புக்கூடுகள் துப்புரவு செய்யப்பட்டு மீட்கப்பட்டன.

இதன்படி, இதுவரை 423 எலும்புக் கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் சேதமடைந்த மோதிரம் ஒன்றும் விரல் எலும்புடனான செப்பிலான மோதிரம் ஒன்றும் குவியலாக இரண்டு தொகுதி என்புகூடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை