அமெரிக்க தேர்தல் முறையில் ரஷ்யா தலையீடு – ட்ரம்பின் குற்றச்சாட்டிற்கு பதிலடி!
அமெரிக்காவின் தேர்தல்களில் ரஷ்யா தலையீடு செய்யவில்லை என கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையில் உரையாற்றிய ட்ரம்ப், அமெரிக்க தேர்தல் அமைப்பில் உள்ள பலவீனங்கள் குறித்து கருத்து வெளியிடும்போது ரஷ்யாவின் தலையீடு தொடர்பில் பேசியிருந்தார்.
அமெரிக்கத் தேர்தல் அமைப்பு வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு எளிதில் இலக்காகக்கூடியதாகவே உள்ளது என்று குறிப்பிட்ட ட்ரம்ப், புதிதாக வெளியிடப்பட்ட உளவுத் தகவல்கள் தேர்தல் பாதுகாப்பில் உள்ள பலவீனங்களை அம்பலப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் ட்ரம்பின் இந்த கூற்றை கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், மறுத்துள்ளார்.
அமெரிக்கத் தேர்தல் செயல்முறைகளில் செல்வாக்கு செலுத்த முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மாஸ்கோ நீண்ட காலமாக மறுத்து வருவதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.




