தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சாமர சம்பத் தசநாயக்க மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராக எந்தவொரு விளக்கமோ நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் இலங்கை செய்தி

சஜித்தின் கூட்டத்தை புறக்கணிப்பது ஏன்? சிறீதரன் எம்.பி. விளக்கம்

  • September 26, 2026
  • 0 Comments

தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சாமர சம்பத் தசநாயக்க மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராக எந்தவொரு விளக்கமோ நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார். அக்குற்றச்சாட்டுகள் மீளப்பெறப்படும் வரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு கூட்டங்களிலும் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்புமிக்க பதவியில் உள்ள சஜித் […]

ஹோர்முஸ் (Hormuz) நீரிணையை மீண்டும் திறந்து மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரானின் முன்மொழிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளதாக 'வாஷிங்டன் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரானின் முன்மொழியை நிராகரித்தது அமெரிக்கா: தொடரும் பதற்றம்

  • September 26, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் (Hormuz) நீரிணையை மீண்டும் திறந்து மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரானின் முன்மொழிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. இதனிடையே, இத்திட்டம் குறித்து அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ பதிலுக்காக ஈரான் காத்திருப்பதாக தெரியவருகின்றது. நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் ஈரான் இந்த ராஜதந்திர முயற்சியை முன்வைத்தது. கத்தார் மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட இந்த முன்மொழிவு ஏற்கப்பட்டால், ஏழு நாட்களுக்குள் முக்கியத்துவம் வாய்ந்த […]

ஐரோப்பா

அமைதி பேச்சுவார்த்தைக்காக மொஸ்கோ செல்ல பணிப்புரை – தகாத வார்த்தையால் பதிலளித்த ஜெலன்ஸ்கி

  • September 26, 2026
  • 0 Comments

மொஸ்கோவிற்கு சென்று ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. உக்ரைன்-ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு அமெரிக்கா முயன்று வரும் நிலையில், ட்ரம்ப் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கத் தலைவருடனான தனது சந்திப்பில் விடுக்கப்பட்ட இந்த வேண்டுகோளை ஜெலென்ஸ்கி நிராகரித்தார். மேலும், ட்ரம்ப் இந்த விவகாரத்தை எழுப்பியது அவரை வருத்தமடையச் செய்ததாக உக்ரைன் ஜனாதிபதியின்  நிலைப்பாட்டை அறிந்தவர்கள் தெரிவித்தனர். எப்போது மாஸ்கோவிற்குச் செல்வீர்கள் என்று […]

ஜனநாயகக் காங்கோ குடியரசில் (DR Congo) ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில், நாட்டின் மூத்த ராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் செய்தி

காங்கோவில் ராணுவ விமானம் விபத்து: 14 பேர் பலி

  • September 26, 2026
  • 0 Comments

ஜனநாயகக் காங்கோ குடியரசில் (DR Congo) ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில், நாட்டின் மூத்த ராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து தென்மேற்கு மாகாணமான குவாங்கோவில் (Kwango) உள்ள கேங்கே (Kenge) பகுதியில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது. தென்மேற்கு நகரமான கிக்விட்டில் (Kikwit) இருந்து தலைநகர் கின்ஷாசா நோக்கிப் புறப்பட்ட இந்த விமானத்தில், பயணத்தின்போது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து, கேங்கே பகுதியில் விமானத்தை அவசரமாகத் தரையிறக்க விமானி முயன்றுள்ளார். எனினும், […]

வடக்கு மாகாணத்தில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள காங்கேசன்துறை, பரந்தன் மற்றும் மாங்குளம் ஆகிய மூன்று முதலீட்டு வலயங்களின் முன்னேற்றம், முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சவால்கள் இலங்கை செய்தி

வடக்கு முதலீட்டு வலயங்கள் குறித்து ஆராய்வு

  • September 26, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள காங்கேசன்துறை, பரந்தன் மற்றும் மாங்குளம் ஆகிய மூன்று முதலீட்டு வலயங்களின் முன்னேற்றம், முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சவால்கள் மற்றும் முதலீடுகளை விரைவாக ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் துமிந்த ஹூலன்ஹமுவ தலைமையிலான குழுவினருக்கிடையில் இன்று (26.09.2026) சனிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் துமிந்த ஹூலன்ஹமுவ தலைமையிலான குழுவினர் […]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று ஒரே நாளில் 7 சடலங்கள் தொடர்பில் உடற்கூற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவற்றில் நான்கு மரணங்கள் தற்கொலை காரணமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

யாழில் தற்கொலைகள் அதிகரிப்பு:ஒரே நாளில் மட்டும் 4 பேர் மரணம்

  • September 26, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று ஒரே நாளில் 7 சடலங்கள் தொடர்பில் உடற்கூற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவற்றில் நான்கு மரணங்கள் தற்கொலை காரணமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அண்மைய நாள்களில் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, இதற்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுப்பதற்கான அவசர முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறுகிய காலப்பகுதியில் இவ்வாறான தற்கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றமை யாழ். குடாநாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், இது குறித்த சமூக […]

ஐ.நா. சபை மற்றும் பிற அமைப்புகள் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டிய திருத்தந்தை லியோ (Pope Leo), சர்வதேச அளவிலான பேச்சுவார்த்தைகள் வெறும் போலி நாடகமாக (charade) மாறும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளார். ஐரோப்பா செய்தி

“அதிகாரத்தில் இருக்கும் சிலர் நீதியைக்கூட விற்பனை பொருளாகவே பார்க்கின்றனர்”  

  • September 25, 2026
  • 0 Comments

ஐ.நா. சபை மற்றும் பிற அமைப்புகள் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டிய திருத்தந்தை லியோ (Pope Leo), சர்வதேச அளவிலான பேச்சுவார்த்தைகள் வெறும் போலி நாடகமாக (charade) மாறும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளார். பாரிஸில் உள்ள ஐ.நாவின் யுனெஸ்கோ (UNESCO) தலைமையகத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ” அதிகாரத்தில் இருப்பவர்கள் சட்டத்திற்கு மதிப்பளிப்பதற்கு பதிலாக, தங்களது சுயநலத்திற்கு தேவைப்படும்போது அதை மேற்கோள் காட்டுவதையும், தங்களைக் கட்டுப்படுத்தும்போது அதைப் புறக்கணிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். நீதியைக் கூட விற்பனை […]

அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தில்  சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு இன்று (24) சான்றுரைப்படுத்தினார். இலங்கை செய்தி

22 இன் பிரதான நோக்கம் என்ன? வெளியான விசேட அறிவிப்பு

  • September 25, 2026
  • 0 Comments

அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தில்  சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு இன்று (24) சான்றுரைப்படுத்தினார். இத்திருத்தத்தின் மூலம் ஊடாக உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும் திருத்தப்படுகிறது. அத்துடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 19 இலிருந்து 24 ஆக அதிகரிப்பதற்காக அரசியலமைப்பின் 137ஆவது உறுப்புரையும் திருத்தப்படுகிறது. இதற்கு அமைய,  பிராந்திய மேன்முறையீட்டு நீதிமன்றங்களை நிறுவி […]

அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று (25) மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இலங்கை செய்தி

முக்கிய இரு சட்டமூலங்கள் நிறைவேற்றம்: நாடாளுமன்றில் இன்று நடந்தது என்ன?

  • September 25, 2026
  • 0 Comments

அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று (25) மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப 7.13ற்கு ஆரம்பானது. வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கு அமைய அரசியலமைப்பின் இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து குழுநிலையில் குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது உறுப்புரைக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும், […]

ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெறவுள்ள போட்டியில் இஸ்ரேல் அணியுடன் விளையாடுவதற்கு தனது பகிரங்க எதிர்ப்பை பதிவு செய்த முதல் அயர்லாந்து குடியரசு (Republic of Ireland) கால்பந்து வீரராக ஜேசன் நைட் (Jason Knight) மாறியுள்ளார். செய்தி விளையாட்டு

இஸ்ரேலுடன் விளையாட அயர்லாந்து கால்பந்து அணி வீரர் கடும் எதிர்ப்பு

  • September 25, 2026
  • 0 Comments

ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெறவுள்ள போட்டியில் இஸ்ரேல் அணியுடன் விளையாடுவதற்கு தனது பகிரங்க எதிர்ப்பை பதிவு செய்த முதல் அயர்லாந்து குடியரசு (Republic of Ireland) கால்பந்து வீரராக ஜேசன் நைட் (Jason Knight) மாறியுள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி ஹங்கேரியின் டெப்ரெசென் (Debrecen) நகரில் பிரித்தானிய நேரப்படி இரவு 7:45 மணிக்கு நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, மறுமுறை மோதும் போட்டி அக்டோபர் 4 அன்று செர்பியாவின் பாக்கா தோபோலாவில் (Backa Topola) நடைபெற உள்ளது. […]