ஐரோப்பா செய்தி

“அதிகாரத்தில் இருக்கும் சிலர் நீதியைக்கூட விற்பனை பொருளாகவே பார்க்கின்றனர்”  

ஐ.நா. சபை மற்றும் பிற அமைப்புகள் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டிய திருத்தந்தை லியோ (Pope Leo), சர்வதேச அளவிலான பேச்சுவார்த்தைகள் வெறும் போலி நாடகமாக (charade) மாறும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.

ஐ.நா. சபை மற்றும் பிற அமைப்புகள் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டிய திருத்தந்தை லியோ (Pope Leo), சர்வதேச அளவிலான பேச்சுவார்த்தைகள் வெறும் போலி நாடகமாக (charade) மாறும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.

பாரிஸில் உள்ள ஐ.நாவின் யுனெஸ்கோ (UNESCO) தலைமையகத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

” அதிகாரத்தில் இருப்பவர்கள் சட்டத்திற்கு மதிப்பளிப்பதற்கு பதிலாக, தங்களது சுயநலத்திற்கு தேவைப்படும்போது அதை மேற்கோள் காட்டுவதையும், தங்களைக் கட்டுப்படுத்தும்போது அதைப் புறக்கணிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். நீதியைக் கூட விற்பனை பொருளாகவே அவர்கள் கருதுகின்றனர்.

ஐ.நா மற்றும் பிற பலதரப்பு அமைப்புகள் தங்களின் செயல்திறனில் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.

உரையாடல் என்பது அமைதிக்கான ஆதாரமாக பார்க்கப்படுவதற்கு பதிலாக, நடவடிக்கைகளுக்கான தடையாகவும், ஒரு போலி நாடகமாகவுமே பார்க்கப்படுகிறது” என்று திருத்தந்தை தனது உரையில் தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி