உலகம்

அரபு கட்சியின் வெற்றிக்கு தேர்தல் முறைகேடுகளே காரணம் – நெதன்யாகு குற்றச்சாட்டு

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் அரபு கட்சிகள் பெற்றுள்ள அபரிமிதமான வெற்றிகளுக்கு, ஓட்டுப்பதிவில் நடந்த முறைகேடுகளே  காரணம் என்று பெஞ்சமின் நெதன்யாகு ஆதாரங்களை முன்வைக்காமல் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டை அரபு தலைவர்கள் முற்றிலுமாக மறுத்ததுடன், நெதன்யாகு வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில், அரபு வாக்காளர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

இது நெதன்யாகுவுக்கோ அல்லது அவரது முக்கிய யூத அரசியல் போட்டியாளர்களுக்கோ எளிதாக ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பை  கேள்விக்குள்ளாக்கியது.

இந்தச் சூழலில், நெதன்யாகுவும் அவரது தீவிர வலதுசாரி கூட்டாளிகளும் அரபு மக்களுக்கு எதிரான தங்கள் கருத்துகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தேர்தல் முறைகேடு குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாக இஸ்ரேலிய தேர்தல் அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர்.

இருப்பினும், ஒட்டுமொத்த தேர்தல் செயல்முறையிலும் எந்தவிதமான “முறையான முறைகேடுகளும்” நடக்கவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையே அரபு கட்சிகள் மீதான தாக்குதலை அதிகரிப்பதன் மூலம், தனது முக்கிய போட்டியாளரான காடி ஐசென்கோட் Gadi Eisenkot , அரபு கட்சிகளின் ஆதரவுடன் சிறுபான்மை அரசாங்கத்தை அமைக்கும் எண்ணத்தைக் கூட கைவிடச் செய்ய நெதன்யாகு முயல்கிறார் என்று அரசியல் ஆய்வாளர்களும் விமர்சகர்களும் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்