இலங்கை செய்தி

யாழில் தற்கொலைகள் அதிகரிப்பு:ஒரே நாளில் மட்டும் 4 பேர் மரணம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று ஒரே நாளில் 7 சடலங்கள் தொடர்பில் உடற்கூற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவற்றில் நான்கு மரணங்கள் தற்கொலை காரணமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று ஒரே நாளில் 7 சடலங்கள் தொடர்பில் உடற்கூற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவற்றில் நான்கு மரணங்கள் தற்கொலை காரணமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அண்மைய நாள்களில் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, இதற்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுப்பதற்கான அவசர முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறுகிய காலப்பகுதியில் இவ்வாறான தற்கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றமை யாழ். குடாநாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், இது குறித்த சமூக மற்றும் உளவியல் ரீதியான விழிப்புணர்வின் அவசியத்தை வலுவாக வலியுறுத்தியுள்ளது.

அதிகரித்து வரும் தற்கொலைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விசேட மருத்துவர்கள் அணி ஒன்று நேற்று அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு இணங்க, மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுசரணையுடன் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்ட விசேட தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் திட்டங்கள் தற்போது தீவிரமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை