இலங்கை செய்தி

முக்கிய இரு சட்டமூலங்கள் நிறைவேற்றம்: நாடாளுமன்றில் இன்று நடந்தது என்ன?

அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று (25) மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று (25) மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப 7.13ற்கு ஆரம்பானது.

வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கு அமைய அரசியலமைப்பின் இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குழுநிலையில் குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது உறுப்புரைக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் பதிவாகின.

இதற்கு அமைய அரசியலமைப்பின் இருபத்திரெண்டாவது திருத்தத்ச் சட்டமூலத்தின் இரண்டாவது உறுப்புரையும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இதன் பின்னர், சட்டமூலம் மீதான மூன்றாவது மதிப்பீடுக்கான வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டு, மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் மூன்றாவது மதிப்பீடு நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை, நீதித்துறை (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப 7.53 மணிக்கு இடம்பெற்றது. குறித்த வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் மீதான மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கு அமைய நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மூன்றாவது மதிப்பீடு 96 மேலதிக வாக்குகளால் திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது.

அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தம்) சட்டமூலம் ஆகிய இரண்டு சட்டமூலங்களையும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் முதலாவது மதிப்பீடுக்காக ஓகஸ்ட் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

இச்சட்டமூலங்கள் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதம் நேற்றையதினமும் (24) இன்றையதினமும் (25) பாராளுமன்றத்தில் இடம்பெற்றன.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை