அரசியல் இலங்கை செய்தி

சஜித்தின் கூட்டத்தை புறக்கணிப்பது ஏன்? சிறீதரன் எம்.பி. விளக்கம்

தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சாமர சம்பத் தசநாயக்க மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராக எந்தவொரு விளக்கமோ நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சாமர சம்பத் தசநாயக்க மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராக எந்தவொரு விளக்கமோ நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அக்குற்றச்சாட்டுகள் மீளப்பெறப்படும் வரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு கூட்டங்களிலும் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்புமிக்க பதவியில் உள்ள சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இடம்பெறும் கூட்டங்களில் தான் கலந்துகொள்ளாமைக்கான காரணத்தைத் தெளிவுபடுத்துவதாக சிறீதரன் எம்.பி. தனது கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் மற்றொரு உறுப்பினரும் தன் மீது முன்வைத்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இதுவரை எந்தவொரு கண்டனத்தையோ விளக்கத்தையோ வெளியிடவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, கடந்த 2025 ஒக்டோபர் 23 அன்று புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, அரசமைப்புச் சபையின் உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் தனக்கு எதிரான முறைப்பாட்டை மறைக்க முயன்றார் என்றும், ‘நலன்சார் முரண்பாட்டை’ ஏற்படுத்திச் சிறப்புரிமைகளை மீறினார் என்றும் நாடாளுமன்றத்தில் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார் என்பதையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

எதிர்க்கட்சி வரிசையில் உள்ள சக உறுப்பினர்கள் தன் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்வைத்த இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் உடனடியாக மீளப்பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்த வேண்டும் என்றும் சிறீதரன் எம்.பி. அந்தக் கடிதத்தில் கோரியுள்ளார்.

அத்தகைய நியாயமான சந்தர்ப்பம் ஏற்படும் வரை அல்லது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை, எதிர்க்கட்சித் தலைவரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்படும் எத்தகைய கூட்டங்களிலும் தாம் இனிப் பங்கேற்கப் போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை