புளூட்டோவிற்கு அப்பால் பனி நிறைந்த விண்பொருள் அடையாளம்
புளூட்டோவிற்கு அப்பால் சுற்றி வரும் பனி நிறைந்த ஒரு விண்பொருளை சிலியில் உள்ள விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.
தொலைநோக்கியில் இந்த பொருள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
‘2026 ED138’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்பொருள், சுமார் 370 முதல் 930 மைல்கள் (600 முதல் 1,500 கி.மீ) விட்டம் கொண்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
இது பூமியை விட சுமார் 46 மடங்கு அதிக தொலைவில் சூரியனைச் சுற்றி வருகிறது.
ஒப்பீட்டளவில், புளூட்டோ சூரியனிலிருந்து சராசரியாக 40 மடங்கு அதிக தொலைவில் சுற்றி வருகிறது.
இந்த விண்பொருள் ஒரு குள்ளக் கோள் தானா என்பதை உறுதிப்படுத்த மேலும் பல அவதானிப்புகள் தேவைப்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.




