அமைதி பேச்சுவார்த்தைக்காக மொஸ்கோ செல்ல பணிப்புரை – தகாத வார்த்தையால் பதிலளித்த ஜெலன்ஸ்கி
மொஸ்கோவிற்கு சென்று ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
உக்ரைன்-ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு அமெரிக்கா முயன்று வரும் நிலையில், ட்ரம்ப் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கத் தலைவருடனான தனது சந்திப்பில் விடுக்கப்பட்ட இந்த வேண்டுகோளை ஜெலென்ஸ்கி நிராகரித்தார்.
மேலும், ட்ரம்ப் இந்த விவகாரத்தை எழுப்பியது அவரை வருத்தமடையச் செய்ததாக உக்ரைன் ஜனாதிபதியின் நிலைப்பாட்டை அறிந்தவர்கள் தெரிவித்தனர்.
எப்போது மாஸ்கோவிற்குச் செல்வீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ஜெலென்ஸ்கி, “ஒரு ஏவுகணையில்” என்று பதிலளித்து, அதைத் தொடர்ந்து ஒரு தகாத வார்த்தையையும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு வெள்ளை மாளிகை பதிலளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




