நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தின் உப நிகழ்வொன்றின்போது, பிரித்தானியா வெளியுறவுச் செயலர் எட் மிலிபாண்ட் (Ed Miliband), ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியைச் (Abbas Araqchi) சந்தித்து பேச்சு நடத்தினார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ஈரான் ஆதரவு குழுக்களுக்கு பிரித்தானியா எச்சரிக்கை

  • September 25, 2026
  • 0 Comments

நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தின் உப நிகழ்வொன்றின்போது, பிரித்தானியா வெளியுறவுச் செயலர் எட் மிலிபாண்ட் (Ed Miliband), ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியைச் (Abbas Araqchi) சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போது ஈரான் ஆதரவு குழுக்களால் பிரித்தானிய மண்ணில் மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள், பயமுறுத்தல்கள் அல்லது விரோத நடவடிக்கைகளைத் தமது நாடு “சகித்துக் கொள்ளாது” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் […]

யாழ்ப்பாணம், திருநெல்வேலிச் சந்தைப் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இலங்கை செய்தி

யாழ். திருநெல்வேலி சந்தையில் பட்டப்பகலில் அரங்கேறிய கொடூரம்

  • September 25, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், திருநெல்வேலிச் சந்தைப் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருநெல்வேலிச் சந்தையில் வேலை செய்யும் இரு இளைஞர்களுக்கு இடையே திடீரென முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த வாய்வார்த்தை முற்றிய நிலையில், ஒரு இளைஞர் மற்றையவர் மீது சரமாரியாகக் கத்திக் குத்துத் தாக்குதலை நடத்தியுள்ளார். தாக்குதலுக்குள்ளான இளைஞர் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து கிடந்த போதிலும், அச்சம் காரணமாக அங்கிருந்த எவரும் அவரை மீட்க முன்வரவில்லை. சம்பவம் […]

சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்யக் கோரி, தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் உள்ளிட்ட மூவினத்தவரும் இணைந்து வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை கவனவீர்ப்புப் போராட்டம் மற்றும் நடைபவனியை முன்னெடுத்தனர். இலங்கை செய்தி

அனோஜனுக்கு மன்னிப்புகோரி மூவின மக்களும் ஒன்றிணைந்து வவுனியாவில் போராட்டம்

  • September 25, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்யக் கோரி, தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் உள்ளிட்ட மூவினத்தவரும் இணைந்து வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை கவனவீர்ப்புப் போராட்டம் மற்றும் நடைபவனியை முன்னெடுத்தனர். இதன்போது பொதுமக்களிடமிருந்து விசேட கையெழுத்துகளும் சேகரிக்கப்பட்டன. வவுனியா கந்தசாமி ஆலயத்தில் அனோஜனின் விடுதலை வேண்டி விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மற்றும் பௌத்த மதத் தலைவர்களின் பங்கேற்புடன் அங்கிருந்து ஆரம்பமான நடைபவனி […]

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலையொட்டி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று முன்னெடுக்கப்பட்ட அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வருகை தந்த பொலிஸார், ஒலிபெருக்கிகளை அகற்றுமாறு பணித்தமையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இலங்கை செய்தி

யாழ்.பல்கலையில் ‘திலீபன் நினைவேந்தல்’ உண்ணாவிரதப் போராட்டம்

  • September 25, 2026
  • 0 Comments

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலையொட்டி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று முன்னெடுக்கப்பட்ட அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வருகை தந்த பொலிஸார், ஒலிபெருக்கிகளை அகற்றுமாறு பணித்தமையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக மாணவர்களால் அமைதியான முறையில் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. போராட்டம் நடைபெறும் இடத்துக்குத் திடீரென வருகை தந்த பொலிஸார், அங்கு அமைக்கப்பட்டிருந்த […]

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சனிக்கிழமைக்குள் (26) ராஜினாமா செய்யாவிட்டால், ஒக்டோபர் 2 முதல் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் என்று 'கரப்பான்' (Cockroach) இளைஞர் இயக்கத்தின் நிறுவனர் அபீஜித் திப்கே வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். இந்தியா செய்தி

ஒக்டோபர் 02 முதல் இந்தியா முழுதும் போராட்டம் வெடிக்கும்: CJP எச்சரிக்கை

  • September 25, 2026
  • 0 Comments

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சனிக்கிழமைக்குள் (26) ராஜினாமா செய்யாவிட்டால், ஒக்டோபர் 2 முதல் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் என்று ‘கரப்பான்’ (Cockroach) இளைஞர் இயக்கத்தின் நிறுவனர் அபீஜித் திப்கே வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் கட்சிக்கு சாதகமாக வாக்காளர் பட்டியலில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அது குறித்துத் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் துணை அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாகச் செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டது. அதைத் […]

ஊழல் வழக்கில் விதிக்கப்பட்ட 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையை இடைநிறுத்தி வைக்குமாறு மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

சிறை தண்டனையை இடைநிறுத்தகோரி மலேசியாவின் முன்னாள் பிரதமர் மேன்முறையீடு

  • September 25, 2026
  • 0 Comments

ஊழல் வழக்கில் விதிக்கப்பட்ட 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையை இடைநிறுத்தி வைக்குமாறு மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். மற்றொரு வழக்கிற்கான தண்டனையில் அவருக்கு அரச மன்னிப்பு வழக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்காள்ளப்பட்டுள்ளது. 73 வயதான நஜீப், தாம் பிரதமராக இருந்தபோது தொடங்கிய ‘1மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாட்’ (1MDB) என்ற அரசு நிதியத்திலிருந்து பில்லியன் கணக்கான டாலர்களைக் கையாடல் செய்தமை மற்றும் பணமோசடி வழக்குகளில் குற்றவாளி […]

ஜனநாயகக் காங்கோ குடியரசின் (DRC) டாங்கனிகா ஏரியில் (Lake Tanganyika) பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 49 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். உலகம் செய்தி

காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்து: 41 பேர் பலி

  • September 25, 2026
  • 0 Comments

ஜனநாயகக் காங்கோ குடியரசின் (DRC) டாங்கனிகா ஏரியில் (Lake Tanganyika) பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 49 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். படகில் பயணித்த மற்ற பயணிகளைக் கண்டறியும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் காங்கோவின் டாங்கனிகா மாகாணப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நோரிஸ் முலோங்கோயி, அசோசியேட்டட் பிரஸ் (AP) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். காங்கோவின் மாபேரா (Mapera) கிராமத்திற்கு அருகே சுமார் 100 பயணிகளுடனும் சரக்குகளுடனும் சென்றபோது […]

யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று பக்திபூர்வமாக நடைபெற்றது. இலங்கை செய்தி

பக்தர்கள் புடைசூழ தேரேறி வந்தார் வல்லிபுரம் ஆழ்வார்

  • September 25, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று பக்திபூர்வமாக நடைபெற்றது. யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றான வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது. இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர்த் விழாவில் கலந்துகொள்வதற்காக வடமராட்சியில் குவிந்தனர். அரோகரா முழக்கங்கள் மற்றும் பக்திப் பாடல்கள் ஒலிக்க, […]

நேபாளம், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து, ‘இமயமலை காலநிலை மீள்தன்மை அமைப்பை’ (Himalayan Climate Resilience Mechanism) உருவாக்க வேண்டும் என்று நேபாள பிரதமர் பாலேந்திர ஷா வலியுறுத்தியுள்ளார். இந்தியா உலகம் செய்தி

இமயமலையைக் காக்க இந்தியா, சீனாவிடம் ஒத்துழைப்பு கோரும் நேபாளம்

  • September 25, 2026
  • 0 Comments

நேபாளம், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து, ‘இமயமலை காலநிலை மீள்தன்மை அமைப்பை’ (Himalayan Climate Resilience Mechanism) உருவாக்க வேண்டும் என்று நேபாள பிரதமர் பாலேந்திர ஷா வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81-வது கூட்டத்தொடரில் உரையாற்றிய அவர், புவி வெப்பமடைதலால் இமயமலையின் சூழலியல் கடுமையாகச் சீர்குலைந்து வருகிறது. காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க சர்வதேச ஒத்துழைப்பு அவசியம். இமயமலைப் பகுதி சுமார் 200 கோடி மக்களின் வாழ்விடமாக உள்ளது. இது நேபாளத்தைத் தாண்டி […]

மக்களை அடக்கி ஆள்வதற்கோ - சர்வாதிகாரத்தை நோக்கி பயணிப்பதற்காகவோ நீதித்துறையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளவில்லை. அரசியல் இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தின் உண்மையான நோக்கம் என்ன?

  • September 25, 2026
  • 0 Comments

“மக்களை அடக்கி ஆள்வதற்கோ – சர்வாதிகாரத்தை நோக்கி பயணிப்பதற்காகவோ நீதித்துறையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளவில்லை. மாறாக வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.” – என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார திட்டவட்டமாக தெரிவித்தார். தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கிய உறுதி மொழியையே நாம் நிறைவேற்றிவருகின்றோம். வலுவிழந்த எதிரணிகள் எப்படிதான் கூச்சல் இட்டாலும், மக்களுக்கான எமது பயணம் தொடரும் எனவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம், நீதித்துறை […]