இங்கிலாந்து அணிக்கு ஆறுதல் வெற்றி
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இன்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 55 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 386 ஓட்டங்களைக் குவித்தது. அந்த அணி சார்பில் பென் டக்கெட் 167 ஓட்டங்களைப் பெற்றார்.
387 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 45.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 331 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி சார்பில் பவன் ரத்நாயக்க இப்போட்டியிலும் சதமடித்து அசத்தினார். அணித்தலைவர் குசல் மெண்டிஸ் 89 ஓட்டங்களைப் பெற்றார்.
இலங்கை, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முக்கோணத் தொடரில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஏற்கனவே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.
தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி, இந்த ஆறுதல் வெற்றியுடன் தொடரிலிருந்து விடைபெற்றுள்ளது.





