ஐரோப்பா

உச்சபட்ச வெப்பநிலை – பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை!

  • May 20, 2026
  • 0 Comments

பிரித்தானியர்கள் அதிகரித்த வெப்ப அலையை சமாளிக்க தயாராக வேண்டும் என மெட் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வார இறுதியில் வெப்பநிலையானது 31°C-ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. இங்கிலாந்தின் தெற்கு, கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை முதல் வரும் புதன் கிழமை வரை உச்சபட்ச வெப்பநிலை குறித்த எச்சரிக்கையை சுகாதாரப் பாதுகாப்பு முகமை இன்று  அறிவித்துள்ளது. இதேவேளை அதிகரித்து வரும் காலநிலை மாற்றங்களால்  2050 ஆம் ஆண்டிற்குள் வெப்பநிலை உயர்வானது 300 சதவீதத்தால் […]

ஐரோப்பா

பாதுகாப்பு அமைச்சை  மறுசீரமைத்து வரும் ஜெர்மனி!

  • May 20, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சை  மறுசீரமைத்து வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. இந்த அமைப்பை மேலும் நெகிழ்வானதாகவும், விரைவாகப் பதிலளிக்கக்கூடியதாகவும் மாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் ஐரோப்பிய கூட்டாளிகளுடனான ஒத்துழைப்பில் அதிக கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. ஜெர்மனியில் தங்கியுள்ள 5000 துருப்புகளை மீளப் பெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். நேட்டோவுடான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகள் தனது சொந்த பாதுகாப்பை பலப்படுத்துவதில் கூட்டிணைய […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் எரிபொருள் வரி உயர்வு திட்டம் இடைநிறுத்தம்

  • May 20, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் எரிபொருள் வரியை உயர்த்தும் திட்டத்தை அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதாக பிரதமர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு யுக்ரைன் போர் தொடங்கியபோது, எரிபொருள் வரியில் 5 பென்ஸ் (pence)தற்காலிக குறைப்பு வழங்கப்பட்டது. அந்தக் குறைப்பை இந்த ஆண்டு படிப்படியாக நீக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. ஆனால், ஈரான் போரைத் தொடர்ந்து அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு காரணமாக, இந்த வரி உயர்வை கைவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தன. இதையடுத்து, திட்டமிட்டபடி 5 பென்ஸ் வரி […]

ஐரோப்பா செய்தி

ரஷ்ய எரிபொருள் இறக்குமதி அனுமதி குறித்து பிரிட்டன் அரசுக்கு கடும் விமர்சனம்

  • May 20, 2026
  • 0 Comments

ரஷ்ய கச்சா எண்ணெயிலிருந்து பிற நாடுகளில் சுத்திகரிக்கப்படும் டீசல் மற்றும் ஜெட் எரிபொருள் இறக்குமதிக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக அனுமதி குறித்து அரசாங்கம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட அவசரக் கேள்விக்கு பதிலளித்த வர்த்தக அமைச்சர் கிறிஸ் பிரையன்ட் (Chris Bryant), “தற்போதுள்ள எந்தத் தடைகளையும் அரசாங்கம் நீக்கப் போவதில்லை என கூறினார். டீசல் மற்றும் ஜெட் எரிபொருளை தொடர்ந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கும் வகையில் மட்டுமே குறிப்பிட்ட தற்காலிக உரிமம் […]

லார்ட் மாண்டல்சன் பதவி நீக்கத்துக்கு பின் உயர்மட்ட தூதுவர் திடீர் ராஜினாமா

  • May 20, 2026
  • 0 Comments

லோர்ட் மண்டேல்சன் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இடைக்காலத் தூதராகப் பணியாற்றிய உயர்மட்ட தூதுவர் ஜேம்ஸ் ரோஸ்கோ திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது விலகலுக்கான காரணம் குறித்து எந்த விளக்கமும் வழங்கப்படவில்லையென கூறப்படுகிறது 2022 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் துணைத் தூதுவராக இருந்த ரோஸ்கோ, மண்டேல்சனுக்குப் பதிலாக அமெரிக்காவிற்கான புதிய தூதுவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பின்னர் அந்தப் பொறுப்பு சர் கிறிஸ்டியன் டர்னருக்கு (Sir Christian […]

உலகம் செய்தி

தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: ஈரான் சபாநாயகர் எச்சரிக்கை!

  • May 20, 2026
  • 0 Comments

அமெரிக்கா ஒரு புதிய போரைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் Mohammad Bagher Ghalibaf எச்சரித்துள்ளார். எனவே, தற்காலிக போர்நிறுத்தக் காலத்தைப் பயன்படுத்தி ஈரான் தனது இராணுவ வலிமையை மீண்டும் கட்டியெழுப்பியுள்ளதாக அவர் நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ளார். ” எதிரிகளின் வெளிப்படையான மற்றும் மறைமுகமான நகர்வுகள் மோதலுக்கான தயாரிப்புகளை வெளிப்படுத்துகின்றன. ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் எதிரிகள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” – எனவும் ஈரான் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் செய்தி

கொங்கோ, உகாண்டாவில் எபோலா பாதிப்பு 600 ஆக உயர்வு

  • May 20, 2026
  • 0 Comments

கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் சந்தேகிக்கப்படும் எபோலா (Ebola) நோயாளர்களின் எண்ணிக்கை 600 ஆக அதிகரித்திருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. அத்துடன் 139 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த வைரஸ் தற்போதும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையாக உள்ளதென ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் அவசரகாலக் குழு கூட்டத்தில், அதன் தலைமை பணிப்பாளர் தெரிவித்துள்ளார் ஆனால், இது உலகளாவிய பெருந்தொற்று அவசரநிலையாக தற்போது கருதப்படவில்லை என்றும் அவர் […]

உலகம்

இஸ்ரேலின் நாடாளுமன்றத்தைக் கலைக்க ஒப்புதல் : தேர்தல் பயத்தில் நெதன்யாகு!

  • May 20, 2026
  • 0 Comments

இஸ்ரேலின் நாடாளுமன்றத்தை கலைக்க அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  இதனால் அடுத்ததாக பொதுத் தேர்தல் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பொதுத் தேர்தலில் தற்போதைய பிரதமர்  பெஞ்சமின் நெதன்யாகு தோல்வியடைவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்கான பூர்வாங்க வாக்கெடுப்பு ஏறக்குறைய ஒருமனதாக நிறைவேறியுள்ள நிலையில், ஒப்புதல் கிடைக்க இன்னும் சில வாரங்கள் ஆகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக செப்டம்பர் அல்லது அக்டோபர் மாத இறுதியில் தேர்தல் நடைபெறலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 7 […]

உலகம் செய்தி

கப்பல் குழு ஆர்வலர்கள் கைது -இஸ்ரேல் அமைச்சர் பகிர்ந்த காணொளி உலகளவில் அதிர்ச்சி

  • May 20, 2026
  • 0 Comments

காசாவுக்கான கப்பல் குழுவைச் சேர்ந்த கைதான ஆர்வலர்கள் தொடர்பான ஒரு காணொளியை இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசியப் பாதுகாப்பு அமைச்சர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அந்த காணொளியில், ஆர்வலர்களின் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில், முழங்காலிட்டு நிற்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. “இஸ்ரேலுக்கு வரவேற்கிறோம்” என்ற தலைப்புடன் அந்த காணொளி பகிரப்பட்டுள்ளது. வீடியோவில், ஒரு இராணுவக் கப்பலின் மேல்தளத்தில் டஜன் கணக்கான ஆர்வலர்கள் இருப்பது மற்றும் இஸ்ரேலிய தேசிய கீதம் ஒலிக்கப்படுவது போன்ற காட்சிகளும் காணப்படுகின்றன. அப்போது அமைச்சர் […]

ஆஸ்திரேலியா செய்தி

“மேற்காசிய போர்” – ட்ரம்பின் அணுகுமுறை குறித்து ஆஸ்திரேலியா அதிருப்தி!

  • May 20, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மேற்காசியா போர் தொடர்பில் தனது நிலைப்பாடுகளை அடிக்கடி மாற்றிவருவதால் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese  சுட்டிக்காட்டியுள்ளார். ட்ரம்ப் நிர்வாகத்தின் வெளிவிவகாரக் கொள்கையானது உலகிற்கும் மிகவும் கடினமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “ஈரான்மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என இரு நாட்களுக்கு முன்னர் ட்ரம்ப் கூறினார். பின்னர் தாக்குதல் ஒத்திவைக்கப்பட்டது என அறிவித்தார். இன்று காலை நாம் விழித்தபோது , பரிசீலிக்கப்படுகின்றது என அறிவிப்பு […]