ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் சரிவு

ஆஸ்திரேலியா மத்திய வங்கி (RBA) தனது உத்தியோகபூர்வ வட்டி வீதத்தில் (Cash Rate) மாற்ற எதுவும் செய்யாமல், அதனைத் தொடர்ந்து 4.35 சதவீதமாகவே பேண தீர்மானித்துள்ளது.

ஆஸ்திரேலியா மத்திய வங்கி (RBA) தனது உத்தியோகபூர்வ வட்டி வீதத்தில் (Cash Rate) மாற்ற எதுவும் செய்யாமல், அதனைத் தொடர்ந்து 4.35 சதவீதமாகவே பேண தீர்மானித்துள்ளது.

ஜூன் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் சற்றுச் சரிவைக் கண்டமை மற்றும் சொத்து விலைகளில் ஏற்பட்ட மிதமான வீழ்ச்சி ஆகியவற்றைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறவுள்ள மத்திய வங்கியின் அடுத்த கூட்டங்கள் வரை இந்த வட்டி வீதமே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைக்காலப் பொருளாதார முன்னறிவிப்பின்படி, பணவீக்கம் முன்னர் அஞ்சப்பட்டதை விடக் குறைந்த மட்டத்திலேயே உச்சமடைந்துள்ளது.

அத்துடன், 2028 ஆம் ஆண்டின் தொடக்கப்பகுதியில் நாட்டின் பணவீக்கம் வங்கியின் இலக்கு மட்டமான 2.5 சதவீதத்தை அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஓரளவு பலன் அளித்துள்ளதால், இனிமேல் மேலும் வட்டி வீத உயர்வுகள் இடம்பெறாது எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி