உலகம்

குழந்தை பருவ தடுப்பூசி உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்து – சில தடுப்பூசிகள் நீக்கம்

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘தங்கத் தர குழந்தை பருவ தடுப்பூசி பரிந்துரைகள்’ ( Gold Standard Childhood Vaccine) என்ற தலைப்பில் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.

இது குழந்தை பருவ தடுப்பூசிகளுக்கான மத்திய அரசின் வழிகாட்டுதல்களை மாற்றியமைப்பதோடு, பாடசாலைகளில் தடுப்பூசி தேவைகளை மறுபரிசீலனை செய்யுமாறு மாநிலங்களை வலியுறுத்துகிறது.

இந்த புதிய வழிகாட்டுதலில் , குழந்தை பருவ தடுப்பூசிகளை மூன்று தனித்தனி அடுக்குகளாக வகைப்படுத்துகிறது. இதன் மூலம், உலகளவில் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 11 முக்கிய தடுப்பூசிகளாகக் குறைக்கப்படுகிறது.

அதே நேரத்தில், கோவிட்-19 ( COVID-19) , இன்ஃப்ளூயன்ஸா (influenza)  மற்றும் ஹெபடைடிஸ் பி ( Hepatitis B)  ஆகியவை பொதுப் பரிந்துரையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

தற்போது ஒற்றை-டோஸ் MMR கூறுகள் சந்தையில் கிடைக்காத போதிலும், தட்டம்மை,  மற்றும் ரூபெல்லா (MMR) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தடுப்பூசியை மூன்று தனித்தனி ஒற்றை-டோஸ் ஊசிகளாகப் பிரிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

தனது அறிவிப்பின் போது, ​​குழந்தை பருவ தடுப்பூசிகளுக்கும் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறும் நம்பகத்தன்மையற்ற கோட்பாடுகளை அடிகோடிட்டு காட்டிய ட்ரம்ப், இது தொடர்பான அறிவியில் ஆராய்ச்சிகளையும் நிராகரித்துள்ளார்.

காப்பீட்டுத் திட்டம் உள்ள பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு முக்கியமற்ற தடுப்பூசிகளைப் போடலாம் என்று அந்த நிர்வாக உத்தரவு குறிப்பிடுகிறது.

அதே நேரத்தில், மாநிலங்கள் தங்கள் தடுப்பூசி சட்டங்களை மதிப்பாய்வு செய்து, தேவைப்பட்டால் புதுப்பிக்க வேண்டும் என்றும் அது முறையாக அறிவுறுத்துகிறது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்